பேட்ட, விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளி ஓசையின்றி சாதனை... டிவி வெளியீட்டுக்கு பின்பும் 100 நாள் ஓடிய 96..! Description: பேட்ட, விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளி ஓசையின்றி சாதனை... டிவி வெளியீட்டுக்கு பின்பும் 100 நாள் ஓடிய 96..!

பேட்ட, விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளி ஓசையின்றி சாதனை... டிவி வெளியீட்டுக்கு பின்பும் 100 நாள் ஓடிய 96..!


பேட்ட, விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளி ஓசையின்றி சாதனை... டிவி வெளியீட்டுக்கு பின்பும் 100 நாள் ஓடிய 96..!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் மெகா ஹிட் ஆன படம் ‘96’ நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பள்ளிக் கால காதல் வாழ்வை கிளறியதாக பலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அக்டோபர் மாதம் 4ம்தேதி ’96’ திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த போதே சன் டிவி பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை விலைக்கு வாங்கியது. திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த 96 திரைப்படத்தை தீபாவளி தினத்தன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது.

திரைப்படங்கள் வெளியான அன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக ரிலீஸ்செய்து விடும் காலம் இது. அதனால் வெள்ளிக் கிழமை வெளியாகும் திரைப்படங்கள் அடுத்த வெள்ளிக் கிழமை வரை ஓடுவதே குதிரைக் கொம்பான விசயமாக இருக்கிறது. இப்படியான சூழலில் தீபாவளிக்கு சன்டிவியில் ஒளிபரப்பான பின்னரும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதித்திருக்கிறது 96.

சென்னை மாயாஜாலில் இத்திரைப்படம் நூறு நாளை நேற்றுத் தாண்டியது. 96 வந்து திரையில் ஓடிக் கொண்டிருந்த இந்த காலத்துக்குள் சீதக்காதி, பேட்ட என விஜய் சேதுபதி நடித்த இருபடங்களே வந்து விட்டது.


நண்பர்களுடன் பகிர :