மாடு துரத்தியும் மிரளாத உறுதியுடன் நின்ற விவேகானந்தர் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று Description: மாடு துரத்தியும் மிரளாத உறுதியுடன் நின்ற விவேகானந்தர் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று

மாடு துரத்தியும் மிரளாத உறுதியுடன் நின்ற விவேகானந்தர் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று


மாடு துரத்தியும் மிரளாத உறுதியுடன் நின்ற விவேகானந்தர் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று

அலையும் துறவி, வீரத்துறவி, பயில்வான் சுவாமி, என்றெல்லாம் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் இன்று. ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த ஜனவரி மாதம் 12ம் தேதியை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.அவர் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் அவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம். அது அவரை வீரத்துறவி என அழைக்கக் காரணமாக இருந்த அவரது மன உறுதி பற்றியது.

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் லண்டனுக்குச் சென்றிருந்தார். அங்கு தனது நண்பரின் பண்ணை வீட்டில் தங்கி இருந்தார். அந்த பண்ணையில் கால்நடைகளும் இருந்தன. அதில் ஒருநாள் மாலை சுவாமி விவேகானந்தர், அவரது நண்பர், நண்பரின் மனைவி ஆகியோர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பண்ணையில் இருந்த மாடு ஒன்று அசுர வேகத்தோடு இவர்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது. இதைப் பார்த்த நண்பரின் மனைவி மயங்கி விழுந்து விட்டார்.

அவரைத் தூக்க விவேகானந்தரும், நண்பரும் குனிந்தனர். மாடு இப்போது இவர்கள் பக்கத்தில் வந்து விட்டது. எங்கே முட்டிவிடுமோ என்னும் அச்சத்தில் நண்பரும் எதிர்திசையில் ஓடிவிட்டார். ஆனால் விவேகானந்தர் மட்டும் அப்படியே தைரியமாக அதே இடத்தில் நின்றார். பாய்ந்து வந்த மாடு இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்த துவங்கியது. ஒரு கட்டிடத்துக்குள் நண்பர் புகுந்தார். அதன் பின்னரே பண்ணை உரிமையாளர்கள் வந்து மாட்டை கட்டிப் போட்டனர். இத்தனைக்கும் பிறகுதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் விவேகானந்தர்.

இதைப் பார்த்த நண்பருக்கோ ஆச்சர்யம். இது எப்படி சாத்தியம்? மாடு வெறிகொண்டு ஓடி வருகிறது. ஆனால் நீங்களோ தளராத மன உறுதியிடன் நிற்கிறீர்களே? என ஆச்சர்யசத்தில் மூழ்கினார். அதற்கு சுவாமி விவேகானந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘’நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என மன உறுதியுடன் நின்றேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களின் குணம். அதனால்தான் என்னை விட்டுவிட்டு உங்களைத் துரத்தியது.”என முடித்தார். பேராபத்திலும் தளராத மன உறுதியுடன் நின்ற விவேகானந்தரின் பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாடுவது பொருத்தமானது தானே?


நண்பர்களுடன் பகிர :