காசை வாங்க மறுத்த முதியவர்... காவல்துறையினரே அசந்த மாற்றுத்திறனாளியின் நேர்மை..! Description: காசை வாங்க மறுத்த முதியவர்... காவல்துறையினரே அசந்த மாற்றுத்திறனாளியின் நேர்மை..!

காசை வாங்க மறுத்த முதியவர்... காவல்துறையினரே அசந்த மாற்றுத்திறனாளியின் நேர்மை..!


காசை வாங்க மறுத்த முதியவர்... காவல்துறையினரே அசந்த மாற்றுத்திறனாளியின் நேர்மை..!

தமிழ்நாடு மேப் உள்ளிட்ட கையடக்க கைடு வகை புக்குகளை விற்பனை செய்யும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு, போலீஸார் இரக்கப்பட்டு காசு கொடுத்தனர். ஆனால் அவர் புக் விற்று பிழைப்பதாக பேச முடியாத நிலையிலும் சொல்லி, அதை மறுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகர வீதிகளில் போலீஸ் வாகனத்தில் ரோந்து சென்ற காவலர்கள் ஒரு இடத்தில் வண்டியை ஒதுக்கிவிட்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 30 ரூபாய் கையடக்க புத்தகம் விற்பவர் வந்தார். வாத நோயால் ஒரு கை, வாய்ப்பகுதி இழுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர் மாற்றுத் திறனாளியாகவும் இருந்தார். அவரைப் பார்த்ததுமே பரிதாபம் வரும் நிலையில் காட்சி அளித்தார். அவரது தோற்றமும், அவர் புத்தகத்தை சுமந்து செல்வதும் கல் நெஞ்சையும் கரைக்கும்படி இருந்தது. அதைப் பார்த்த போலீஸ் வாகனத்தில் இருந்த காவலர் ஒருவர் அவருக்கு பத்து ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.

ஆனால் அதை நோய்வாய்ப்பட்ட அந்த மாற்றுத்திறனாளி முதியவர் மறுத்துவிட்டார். இல்ல பரவாயில்லை வைச்சுக்கோங்க என மீண்டும், மீணும் அந்த காவலர் கொடுக்க முயற்சித்தும் அவர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

கடைசில் போலீஸார் புக் வாங்குக்கிறோம் என தமிழக மேப் வாங்கினர். அப்போது ஒரு புக் 30 ரூபாய் என்றவரிடம் 500 ரூபாய்க்கு சில்லறை இருக்கா என்றதும், இருக்கு என அவர் உடல்மொழியால் சைகை செய்ய, இனாமை மறுத்த நேர்மையாளரை ஆச்சர்யமாக பார்த்தனர் காக்கிகள்.


நண்பர்களுடன் பகிர :