வறுமைக்கு திருடிய சிறுவனை நூதன முறையில் திருத்தி பசியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன். Description: வறுமைக்கு திருடிய சிறுவனை நூதன முறையில் திருத்தி பசியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன்.

வறுமைக்கு திருடிய சிறுவனை நூதன முறையில் திருத்தி பசியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன்.


வறுமைக்கு திருடிய சிறுவனை நூதன முறையில் திருத்தி பசியாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன்.

நகைச்சுவை மூலம் சமூகத்தில் முற்போக்கான சிந்தனைகளை விதைக்க முடியும் என நிரூபித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழ்த்திரையுலகில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் உருவாக்கத்தில் இவரது பங்கும் உண்டு. இவரது திரை வருகைக்கு பின்னரே நகைச்சுவைக்கென பிரத்யேக கலைஞர்கள் உருவாகினர்.

ஒருநாள் என்.என்.கிருஷ்ணன் அவர் வீட்டு வாசலில் இருந்தார். அப்போது எதிர்வீட்டு கதவில் பூட்டப்படாத நிலையில் ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சிறுவன் இதைப் பார்த்துவிட்டு பூட்டை கழட்டி தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். இதை என்.எஸ்.கிருஷ்ணன் கவனித்து விட்டார். உடனே அந்த பையனை கூப்பிட்டு, இப்படித் திருடலாமா தம்பி? என அறிவுரைக் கூறினார்.

அதற்கு அந்த பொடியன் தவறு தான். ஆனால் பசிக்கிறதே? இப்படி திருடி, பழைய இரும்பு கடையில் இந்த பூட்டை போட்டால் ஒரு நேரம் சாப்பிட்டு விடுவேனே என்றானாம்.

அந்நேரம் வாசல் தாண்டி வந்த எதிர்வீட்டுக்காரர் கதவில் பூட்டு இல்லாததையும், என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு சிறுவனிடம் பேசுவதையும் கண்டார். ஓகோ பூட்டு திருடனை என்.எஸ்.கே மடக்கிப் பிடித்துவிட்டார் என சிறுவன் மீது கோபத்தோடு வந்தார். இதை உணர்ந்து கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன்’’எதிர் வீட்டுக்காரரிடம் ஒரு பையன் பூட்டை எடுத்துக் கொண்டு ஓடினான். இந்த சிறுவன் தான் அவனை ஓடிப்போய் பிடித்து பூட்டையும் வாங்கி வந்தான். சபாஷ், அருமையான முயற்சி. இவனுக்கு சாப்பிட காசு கொடுத்து அனுப்புங்கள்..”எனச் சொல்லிவிட்டு, திருடிய சிறுவன் பக்கமே திரும்பி, சாப்பிட காசு தருவாருப்பா சாப்பிடு எனச் சொல்லிச் சென்றாராம்.


நண்பர்களுடன் பகிர :