விஜய்க்கு துரோகம் செய்யலாமா? காசு தான் முக்கியம்... வைரலாகும் விஜய் ரசிகையின் வாக்குமூலம் Description: விஜய்க்கு துரோகம் செய்யலாமா? காசு தான் முக்கியம்... வைரலாகும் விஜய் ரசிகையின் வாக்குமூலம்

விஜய்க்கு துரோகம் செய்யலாமா? காசு தான் முக்கியம்... வைரலாகும் விஜய் ரசிகையின் வாக்குமூலம்


விஜய்க்கு துரோகம் செய்யலாமா? காசு தான் முக்கியம்...    வைரலாகும் விஜய் ரசிகையின் வாக்குமூலம்

இளையதளபதி விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்க்கார். இப்படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி இருந்தார். இப்படம் தமிழக அரசு வழங்கும் இலவசங்களை கடுமையாய் சாடியது.

இதனால் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்பினையும் சம்பாதித்தது. ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் விஜய் படத்துக்கு எதிராக பேட்டி கொடுத்தனர். கடைசியில் சர்க்காரில் சில காட்சிகளுக்கு கத்திரி போடப்பட்டன. இதற்கு முன்னர் மெர்சல் படத்தில் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள் குறித்து நடிகர் விஜய் பேசினார். அதில் ஜி.எஸ்/டி குறித்தும் வசனங்கள் இருக்க பாஜகவினர் அவரைச் சாடினர்.

சர்க்காரில் விஜய் இலவசங்களை விமர்சித்ததைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் அரசு வழங்கிய இலவசங்களை தூக்கிப் போட்டு உடைப்பதாக வீடீயோ எடுத்து வெளியிட்டனர். டிவி, மிக்ஸி, கிரைண்டர், மடிகணினி ஏன் பசுமை வீட்டை உடைப்பது போல் கூட ஒருவர் வீடீயோ எடுத்து வெளியிட்டார். இப்போது அரசு சார்பில் வழங்கப்பட்டும் வரும் பொங்கல் பரிசையும், ஆயிரம் ரூபாயையும் வாங்க(நீதிமன்றம் தடை செய்த முன்னர் வரை) விஜயண்ணா பேன்ஸ் என வீடீயோ போட்ட கும்பலே முட்டி மோதி வருகிறது.

இதையும் ஒரு பெண் வீடீயோவாக எடுத்துப் போட்டுள்ளார். தன்னோடு ரேசனுக்கு வந்த பெண்ணின் முகத்தை திருப்பிக் காட்டி, ‘’சர்க்காரு படத்தைப் பார்த்துட்டு கிரைண்டர், டிவியெல்லாம் உடைச்ச மூஞ்சி மாதிரி இருக்கே...என்று அவரது முகத்தை கேமரா நோக்கித் திருப்புகிறார்.

மேலும், இங்க என்ன பண்ணுறீங்க? ஆயிரம் ரூபாய் தர்றாங்க ரேசன்ல...என்கிறார்.

அதற்கு அந்த பெண், ‘’அது ஓடாத டிவி உடைச்சேன். இங்க ஆயிரம் ரூபா தாரங்க ஒரு சுடிதாராவது வாங்குவேன். ஆளைப் பாரு ஆளை. வந்து க்யூவில் நில்லேன்” என சொல்கிறார்.

உடனே வீடீயோ எடுக்கும் பெண் விடாப்பிடியாக, ‘விஜய்க்கு இப்படி துரோகம் பண்ணலாமா?’ என்கிறார். அதற்கு, ‘அதெல்லாம் ஒன்னுமில்ல. காசுதான் முக்கியம்’ என்று க்யூவை நோக்கி நிற்கிறார் அந்த பெண்.

என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா?


நண்பர்களுடன் பகிர :