அரசு அங்கன்வாடியில் மகளை சேர்ந்த கலெக்டர்... Description: அரசு அங்கன்வாடியில் மகளை சேர்ந்த கலெக்டர்...

அரசு அங்கன்வாடியில் மகளை சேர்ந்த கலெக்டர்...


அரசு அங்கன்வாடியில் மகளை சேர்ந்த கலெக்டர்...

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தனது மூன்று வயது மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து உள்ளார். இதன் மூலம் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் முன்னுதாரணமாக மாறி உள்ளார்

அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. அப்படியான நிலையில் மாவட்டத்துக்கே பெரிய அதிகாரியான ஆட்சியர் தனது மூன்று வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து உள்ளார்

பொதுவாக உயர் அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அதி நவீன விளையாட்டு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கிண்டர் கார்டனுக்கே அனுப்புவது வழக்கம். ஆனால் நெல்லை ஆட்சியரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :