ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.! Description: ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.!

ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்... மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.!


ஒரு மகனை இழந்து 6 பேருக்கு தாயான நெல்லை பெண்...    மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு.!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மூளை சாவு அடைந்தார் மகன். அவரது உடல் உறுப்புகளை ஆறு பேருக்கு தானமாக வழங்கி ஆறு உயிர்களுக்கு தாய் ஆகி உள்ளார் நெல்லைப் பெண். அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று பாராட்டித் திரும்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தை சேர்ந்த பழனிக்குமார்(39) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். டானா என்னும் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அவர் பாளையாங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிட்சை பழனின்றி பழனிக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது தாயாரிடம் பாளை அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடனே அவர் முற்போக்கு சிந்தனையுடன் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த பழனிகுமாரின் இருதயம், இரண்டு சிறுநீரகங்கள்,கல்லீரல், கண், தோல் ஆகியவை எடுக்கப்பட்டது. இதை இனி தேவையுள்ள 6 பேருக்கு பயன்படுத்தி 6 பேரின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். இதை வழங்கிய நெல்லை பெண்ணை பலரும் பாராட்டினர். கூடவே அவரது துக்கத்திலும் பங்கு கொண்டனர்

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர், பழனிக்குமாரின் தாயை நேரில் போய் பாராட்டியதோடு, அவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையையும் வழங்கியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :