தொலைந்து மூன்றரை மாதங்களுக்கு பின்பு கிடைத்த குழந்தை நாடோடிப் பெற்றோரின் பாசபோராட்டத்துக்கு தீர்வு Description: தொலைந்து மூன்றரை மாதங்களுக்கு பின்பு கிடைத்த குழந்தை நாடோடிப் பெற்றோரின் பாசபோராட்டத்துக்கு தீர்வு

தொலைந்து மூன்றரை மாதங்களுக்கு பின்பு கிடைத்த குழந்தை நாடோடிப் பெற்றோரின் பாசபோராட்டத்துக்கு தீர்வு


தொலைந்து மூன்றரை மாதங்களுக்கு பின்பு கிடைத்த குழந்தை    நாடோடிப் பெற்றோரின் பாசபோராட்டத்துக்கு தீர்வு

வெங்கடேசன்_காளியம்மாள் என்னும் நாடோடித் தம்பதியினரின் மகள் ஹரிணி. ஊசி, பாசி விற்று பிழைப்பு நடத்தும் இத்தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே தங்கள் குழந்தையைத் தொலைத்தனர்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக தொலைந்து போன குழந்தையை தம்பதியினர் தேடி வந்தனர். குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என நாடோடித் தம்பதிகள் உறுதியுடன் இருக்க போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

ஆனாலும் தம்பதியினரின் அழுகுரல் நின்ற பாடில்லை. இரண்டாவது குழந்தையை கருவுற்று இருந்த ஹரிணியின் அம்மா காளியம்மாள், ஹரிணியையே நினைத்து சாப்பிடாமல் தூங்காமல் நோய்வாய்ப்பட்டார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்க்கு தெரிய வந்தது. உடனே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் வெங்கடேசனைத் தொடர்பு கொண்டவர் குழந்தை கிடைக்கும் என நம்பிக்கையூட்டினார். மேலும் தனது குழந்தைகள் அமைப்பு மூலம் தேடுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இக்குழந்தை இன்று திருப்போரூரில் மீட்கப்பட்டது. இதனால் நாடோடி தம்பதியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :