பள்ளி செல்ல மறுத்த பொடியன்: பெற்றோர் செய்த வேலையை பாருங்க... Description: பள்ளி செல்ல மறுத்த பொடியன்: பெற்றோர் செய்த வேலையை பாருங்க...

பள்ளி செல்ல மறுத்த பொடியன்: பெற்றோர் செய்த வேலையை பாருங்க...


 பள்ளி செல்ல மறுத்த பொடியன்: பெற்றோர் செய்த வேலையை பாருங்க...

கிண்டர் கார்டன் பருவத்தில் பிள்ளைகள் பள்ளி செல்ல அடம் பிடிப்பது வாடிக்கையான நிகழ்வு தான். ஆனால் தாய்லாந்தில் அதற்கு ஒரு பெற்றோர் செய்த தடாலடி நடவடிக்கை செம வைரல் ஆகிவருகிறது.


தாய்லாந்து நாட்டில் வசதியான தாய், தந்தையருக்கு பிறந்த அந்த பொடியனுக்கு ஐந்து வயது இருக்கும். கிண்டர் கார்டன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்தான். அப்பாவும், அம்மாவும் வேலைக்கு செல்ல வேண்டும் நேரம் ஆகிறது என தந்தை சொல்ல, நானும் வேலைக்குப் போகிறேன் என சொன்னான் பொடியன். உடனே அப்பா விளையாட்டாக நீ படிக்காவிட்டால் யார் வேலை தருவார்கள். வேண்டுமானால் சாலையோரம் பாட்டில் பொறுக்கலாம் எனச் சொல்ல, ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுக்க ஓகே சொல்லி விட்டான் பொடியன்.

உடனே சிறுவனனின் பெற்றோரும் அவனுக்கு புத்தி சொன்னது போல் இருக்கட்டும் என வேலைக்கு லீவு போட்டுவிட்டு அவனுடனே சென்றார்கள். வேர்க்க, விறுவிறுக்க பாட்டில் பொறுக்கி விற்ற போது, பொடியனுக்கு 2 பாத் மட்டுமே வருமானம் கிடைத்தது. ஆனால் அவன் பஸ்ஸில் வீட்டுக்குச் செல்ல விரும்ப 2 பாத்தில் நீ மட்டும் கூட செல்ல முடியாது எனச் சொல்ல மீண்டும் பாட்டில் பொறுக்கினான் பொடியன்.

இம்முறை மீண்டும் 2 பாத் பணம் மட்டுமே கிடைத்தது. உடனே பொடியன் ஜஸ்கிரீம் குடிக்க ஆசைப்பட்டான். ஆனால் அதற்கும் அந்தப் பணம் பத்தவில்லை. வியர்க்க, விறுவிறுக்க நின்ற பொடியன் ‘’நான் ஸ்கூலுக்கே போயிறட்டுமா?”எனக் கேட்டானே பார்க்கலாம். ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து, பஸ்ஸில் அழைத்துப் போய் பள்ளியில் விட்டனர்.


நண்பர்களுடன் பகிர :