கவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு. Description: கவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு.

கவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு.


கவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள்    ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு.

பாண்டவர்கள் 5 பேர், கொளரவர்கள் 100 பேர் என மகாபாரதத்தில் படித்திருப்போம். இந்த நூறு பேரும் சோதனைக் குழாய் மூலம் பிறந்தவர்கள் என நூதன கண்டிபிடிப்பை நிகழ்த்தியுள்ளார் ஒரு துணைவேந்தர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 106வது இந்திய அறிவியல் மாநாடு நடந்தது. இதில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.நாகேஸ்வர்ராவ் பேசுகையில், ‘’சார்லஸ் டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் முன்பே நிரூபிருத்து விட்டன. விஷ்ணு பயன்படுத்திய சுதர்சன சக்கரம் இலக்கைத் துரத்தி அழித்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்து சேரும். அந்த வகையில் இன்றைய ஏவுகணைகள் நிறுத்தத் தொழில்நுட்பத்திற்கு சுதர்சன சக்கரம் தான் முன்னோடி.

ராவணனிடம் வெவ்வேறு அளவு மற்றும் திறன் கொண்ட 24 விமானங்கள் இருந்தன. அதை இயக்குவதற்கு இலங்கையில் ஏராளம் விமான நிலையங்கள் இருந்தன. கவுரவர்களின் தாயான காந்தாரி எப்படி 100 குழந்தைகளை பெற்றிருக்க முடியும். இது சாத்தியமா என பலரும் கேட்கின்றனர். இது சாத்தியம் தான் என்பதை இன்றைய சோதனைக் குழாய் தொழில்நுட்பம் நிரூபித்திருக்கிறது. மகாபாரதத்தில் கருவுற்ற 100 முட்டைகள், 100 மண்பாண்டங்களில் போடப்படுகின்றன என்றால் அந்த மண்பாண்டங்கள் சோதனைக் குழாய்கள் அல்லாமல் வேறு என்ன?

அந்த காலத்திலேயே ஸ்டெம்செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தில் பிறந்தவர்கள் தான் கவுரவர்கள்.”என்று தன் ஆய்வை சமர்பித்திருக்கிறார் இந்த துணை வேந்தர்!


நண்பர்களுடன் பகிர :