ரஜினி, கமலை வெளுத்து வாங்கிய சத்யராஜ்... திரைக்கும் வெளியேயும் இவர் புரட்சித் தமிழன் தான்! Description: ரஜினி, கமலை வெளுத்து வாங்கிய சத்யராஜ்... திரைக்கும் வெளியேயும் இவர் புரட்சித் தமிழன் தான்!

ரஜினி, கமலை வெளுத்து வாங்கிய சத்யராஜ்... திரைக்கும் வெளியேயும் இவர் புரட்சித் தமிழன் தான்!


ரஜினி, கமலை வெளுத்து வாங்கிய சத்யராஜ்... திரைக்கும் வெளியேயும் இவர் புரட்சித் தமிழன் தான்!

ராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டோம் என அண்மையில் நடந்த ஒரு போராட்டத்தின் போது தமிழ் உணர்வோடு பேசியபவர் சத்யராஜ். திரையில் புரட்சித் தமிழன் என அடைமொழியில் அழைக்கப்படும் இவர் திரைக்கு வெளியேயும் அப்படித் தான்.

இவரது நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளத்திலும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் புரமோஷனுக்கான நிகழ்ச்சியில் பங்கெடுக்க நேற்று கொச்சினுக்கு வந்தார் நடிகர் சத்யராஜ்.

அப்போது அவரிடம் மைக் நீட்டிய மலையாள ஊடகங்கள் கமல், ரஜினியின் அரசியல் வருகையைக் குறித்து கேட்டன. அதற்கு சத்யராஜ் சொன்ன பதில் தான் ஹைலைட். ‘’95 வயதான நல்லகண்ணு போன்ற கம்யூனிஸ்ட்கள் சினிமாக்காரர்களை விட சிறப்பானவர்கள். 41 வருட திரையுலக வாழ்க்கையில் அரசியல் என்னை ஒருபோதும் ஈர்க்கவில்லை. தமிழ்த் திரைப்பட உலகிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களின் நோக்கம் முதலமைச்சர் ஆவது மட்டுமே. மக்களுக்கு சேவை செய்து இவர்கள் விருப்பம் இல்லை.”என்றவர் கடைசியில் சொன்னது தான் சுவாரஸ்யம்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கொள்கை பிடிப்பு மிகுந்த அரசியல்வாதி. தமிழகத்திலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது என் விருப்பம்.”எனச் சொல்லியுள்ளார்


நண்பர்களுடன் பகிர :