முட்டி போட்டு சாமி கும்பிட்ட ஆடு... ஆட்களை மிஞ்சிய பக்தி கொண்ட ஆடு Description: முட்டி போட்டு சாமி கும்பிட்ட ஆடு... ஆட்களை மிஞ்சிய பக்தி கொண்ட ஆடு

முட்டி போட்டு சாமி கும்பிட்ட ஆடு... ஆட்களை மிஞ்சிய பக்தி கொண்ட ஆடு


முட்டி போட்டு சாமி கும்பிட்ட ஆடு...     ஆட்களை மிஞ்சிய பக்தி கொண்ட ஆடு

பக்தி மனிதர்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது ஐந்தறிவு படைத்த உயிரினங்களுக்கும் பொதுவானது. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நம் தமிழகத்தில் நடந்துள்ளது.

கால்நடைகளுக்கும் பக்திக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. பைரவர் சாமியின் வடிவமாக நாயை போற்றுகிறோம். விநாயகர் தனது அருகிலேயே எலியை வைத்துள்ளார். தமிழ்க்கடவுள் முருகன் மயிலை வாகனமாக வைத்துள்ளார். ஏன் நாகரையே தெய்வமாக வணங்கி, பாம்புக்கு பால் ஊற்றும் பழக்கமும் இருக்கிறது. ராமருக்கு வானரங்கள் உதவியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். இப்படியெல்லாம் மனிதர்களுக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஜீவராசிகளும் பக்தியின் பெருமையை உணர்த்துகின்றன.

இங்கும் அப்படித்தான். சாலையோரம் இருந்த அம்மன் கோவிலில் அம்மன் விக்கிரகத்தின் முன்பு தன் முன்னங்கால்கள் இரண்டையும் முட்டி போட்டு மடக்கிய நிலையில் ஆடு ஒன்று முட்டி போட்டு வழிபடத் துவங்கியது. சில நிமிடங்கள் ஆடு கூர்மையாக அம்மனையே பார்த்துக் கொண்டிருந்தது. முட்டி போட்டு வணங்கிய நிலையில் ஆட்டின் கண்களும் அழுகைக்கு தயாராகி இருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் இதை வீடியோவாக முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் சப்தமாக இதுபற்றிப் பேசிய போதும், கூட்டம் திரண்ட போதும் அச்சப்பட்டுக் கூட ஆடு எழுந்திருக்கவில்லை. ஆட்களை மிஞ்சிய பக்தி கொண்ட ஆட்டை அதிசயத்து பார்த்து சென்றனர் பகுதிவாசிகள்!


நண்பர்களுடன் பகிர :