நியூசிலாந்தில் இருந்து புனேவுக்கு போலீஸை தேடிவந்த சகோதிரிகள்.. காக்கிகளே அசந்து போன நெகிழ்ச்சி சம்பவம் Description: நியூசிலாந்தில் இருந்து புனேவுக்கு போலீஸை தேடிவந்த சகோதிரிகள்.. காக்கிகளே அசந்து போன நெகிழ்ச்சி சம்பவம்

நியூசிலாந்தில் இருந்து புனேவுக்கு போலீஸை தேடிவந்த சகோதிரிகள்.. காக்கிகளே அசந்து போன நெகிழ்ச்சி சம்பவம்


நியூசிலாந்தில் இருந்து புனேவுக்கு போலீஸை தேடிவந்த சகோதிரிகள்..     காக்கிகளே அசந்து போன நெகிழ்ச்சி சம்பவம்

காவல்துறைப் பணி என்பது ஆச்சர்யங்கள் நிறைந்தது. ஆதரவற்ற நிலையில் பெற்றோரால் கைவிடப்பட்ட சகோதிரிகளை காப்பகத்தில் சேர்ந்த போலீஸை சில, பல ஆண்டுகளுக்கு பின்பு அவர்கள் தேடி வந்து நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இங்கு அக்கம், பக்கம் இருந்து வரவில்லை. நியூசிலாந்தில் இருந்து வந்துள்ளனர் என்பது தான் ஆச்சர்யம்!





புனே டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேசனில் எஸ்.ஐயாக இருந்தவர் சர்ஜிராவ் காம்பிளே. 1998ல் இவர் அந்த காலவல் நிலையத்தில் பணி செய்த போது பெற்ரோரால் கைவிடப்பட்டு, சாலையில் ஆதரவற்ற நிலையில் நின்ற சகோதிரிகளான இரு சிறுமிகளைக் கண்டார். நல்லெண்ணத்தோடு அவர்கள் இருவரையும் நண்பர்கள் சமூகம் என்னும் குழந்தைகள் காப்பகத்தில் விட்டார்.





3 வயதுக்கும் குறைவான அந்த குழந்தைகளுக்கு காப்பகத்தினரே சீமா, ரீமா எனப் பெயரிட்டனர். தொடர்ந்து குழந்தைகளை நியூசிலாந்து தம்பதி ஒன்றும் தத்தெடுக்க இவர்களது வாழ்க்கைமுறையும் மாறியது.ரீமா இஞ்னியராகவும், சீமா டீச்சராகவும் உள்ளனர். அதுவும் இங்கு அல்ல...நியூசிலாந்தில்!





இவர்கள் தங்களுக்கு வாழ்வு கிடைக்க காரணமான சர்ஜிராவ் காம்பிளேயே தேடி வந்தனர். ஆனால் தற்போது 73 வயதாகும் அவர்2007ம் ஆண்டே ஓய்வு பெற்று விட்டார். ஓய்வுக்கு பின்னர் அவர் எங்கு வசிக்கிறார் என்ற விபரமும் தெரியவில்லை. இதனால் அந்த சகோதிரிகள் சோகத்தோடு நியூசிலாந்து திரும்பியுள்ளனர்.

சகோதிரிகளின் நன்றிப் பெருக்கு புனே நகர காக்கிகளை கண்ணீரில் நனைத்தது.


நண்பர்களுடன் பகிர :