ரெகுலரான வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி: அசத்திய டீக்கடைக்காரர்.. Description: ரெகுலரான வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி: அசத்திய டீக்கடைக்காரர்..

ரெகுலரான வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி: அசத்திய டீக்கடைக்காரர்..


ரெகுலரான வாடிக்கையாளர்களுக்கு தூக்குவாளி: அசத்திய டீக்கடைக்காரர்..

பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் தாள்கள் தடையால் டீக்கடைகளும் சிக்கலில் சிக்கியுள்ளது. பிளாஸ்டிக் தாள்களில் ஊற்றி கொடுக்கப்படும் பார்சல் டீ வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் தன்னிடம் ரெகுலராக பார்சல் வாங்குபவர்களுக்கு தூக்கு வாளி கொடுத்து அசத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிக் கடைகளில் தேக்கு, தாமரை இலைகளில் பார்சல் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதேபோல் ஹோட்டல்களிலும் வாழை இலைக்கு மவுசு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் தடையால் டீக்கடைகளிலும் பார்சல் டீ கொடுப்பதற்கு சிக்கல் ஆகியுள்ளது.

கட்டுமான வேலை, விவசாய வயல் வேலை உள்பட மொத்தமாக வேலை நடக்கும் பகுதிகளுக்கு யாராவது ஒருவரை தேநீர் கடைகளுக்கு அனுப்பி மொத்தமாக பிளாஸ்டிக் கவர்களின் டீ வாங்கி வரச் சொல்வது வழக்கம். இப்போது அதற்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் சென்னை, ஓட்டேரி புதியமாநகர் பகுதியை சேர்ந்த சுமதி டீ ஸ்டாலில் ஒரு வித்யாச முறையை கையாண்டுள்ளனர்.

இக்கடையின் உரிமையாளர்ரங்கசாமி தன்னிடம் ரெகுலராக பார்சல் வாங்கும் 300 வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும் தூக்கு வாளி வழங்கி அசத்தியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :