இரவு உணவு இப்படி இருந்தா தான் ஆரோக்கியம்... உங்க ராத்திரி சாப்பாட்டையும் கவனிங்க! Description: இரவு உணவு இப்படி இருந்தா தான் ஆரோக்கியம்... உங்க ராத்திரி சாப்பாட்டையும் கவனிங்க!

இரவு உணவு இப்படி இருந்தா தான் ஆரோக்கியம்... உங்க ராத்திரி சாப்பாட்டையும் கவனிங்க!


இரவு உணவு இப்படி இருந்தா தான் ஆரோக்கியம்...      உங்க ராத்திரி சாப்பாட்டையும் கவனிங்க!

நேத்து வரை நல்லா இருந்த மனுஷன் ராத்திரி தூங்குனாரு. காலையில் எழுந்திருக்கவே இல்ல என சொல்லும் நிறைய கதைகளை கேட்டிருப்போம். உடல் உபாதைகள் ஒருபக்கம் இருந்தாலும், நம் ஆரோக்கிய வாழ்க்கை நகர்வில் இரவு உணவுக்கும் பங்குண்டு.

ஐஸ்க்ரீம், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை இரவில் அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இரவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கும். செரிமானம் ஆக அதிக நேரம் பிடிப்பதால் பலருக்கும் காலையில் தலைவலியும் ஏற்படுகிறது. என்ன செய்ய நம் பாரம்பர்ய உணவான சோற்றிலேயே அதிகம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இரவில் தயிர் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தயிரில் புளிப்பு, இனிப்பு இரு சுவையும் உள்ளது என்கிறது ஆயுர்வேதம். அதனால் அது கபத்தை அதிகரித்து, சிலருக்கு இரவு நேர சுவாசத்துக்கும் சிக்கல் ஏற்படுத்தும். இரவு நேரம் அளவோடு சாப்பிட வேண்டும். அப்போது தான் நாம் தூங்கும் போது நம் செரிமான மண்டமும் ஓய்வெடுக்கும்.

அதேபோல் சாப்பிட்டவுடன் நீட்டி, முழங்கி படுத்துவிடக் கூடாது. உணவு உண்ட இரு மணி நேரங்களுக்கு பின்பே தூங்க வேண்டும். இரவில் அதிக உப்பு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் . அது ஆரோக்கிய கேட்டுக்கு வழிவகுக்கும். இரவு உணவில் பருப்பு, கொத்தமல்லி, பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை தாராளம் சேர்த்துக் கொள்ளலாம். என்ன, இனிமேல் இரவு சாப்பாட்டில் இதையெல்லாம் கவனிப்பீங்க தானே?


நண்பர்களுடன் பகிர :