பின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா? Description: பின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

பின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா?


பின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாகவே "வாக்கிங்" நல்லது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதிலும் பின்னோக்கி நடந்தால் இன்னும் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.

இன்றைய பாஸ்ட்புட் கலாச்சாரம், போதிய உடல் உழைப்பு இன்மை ஆகியவற்றால் முப்பது வயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவை வந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க உடற்பயிற்சி அவசியமாகிறது. அதேநேரம் வாக்கிங் அதில் ஒரு வரம். காரணம் வயோதிகர்கள் கூட அதை செய்துவிட முடியும்.

ஆனால் பின்னோக்கி நடந்தால் இன்னும் கூடுதல் பலன்களை பெறலாம். தினசரியல்ல, வாரத்தில் ஒருநாள் செய்தால் கூட போதும். அதிகபட்சம் 20 நிமிடங்கள் செய்வதே போதுமானது. இதனால் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும்உடல்நிலை மேம்படுவதோடு, மொத்த மனநிலையும் மேம்படும். இரவுத்தூக்கத்தை சீராக்கும். பின்னோக்கி நடக்கையில் கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும்.

முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடக்கையில் அதிக கலோரிகள் விரைவில் எரிக்கப்படும். உடலின் வளர்ச்சிதை .மாற்றத்தையும் அதிகரிக்கும். பின்பென்ன இனி முன்னோக்கிய உங்கள் கால்கள், அவ்வப்போது பின்னோக்கியும் செல்லட்டும்!


நண்பர்களுடன் பகிர :