பேட்ட படத்தின் கதை இதுதானா? Description: பேட்ட படத்தின் கதை இதுதானா?

பேட்ட படத்தின் கதை இதுதானா?


பேட்ட படத்தின் கதை இதுதானா?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் 10ம் தேதி "பேட்ட" படம் ரிலீஸ் ஆகிறது.

கபாலி, காலா படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றாலும் ரஜினி ரசிகர்களை முழுதாக திருப்திபடுத்தவில்லை. அதன் பின்னர் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்டனான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட 2.0வும் குழந்தைகளைக் கவரும் படமாகவே இருந்தது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ ட்ரெயிலரிலேயே ரஜினி இளமைத் துள்ளலோடு காட்சித் தருகிறார். இதனால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தில் சசிகுமார் மாலிக் என்னும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையில் அவர் ஒரு இந்து பெண்ணை காதலிப்பதாகவும், இதனைப் பிடிக்காத பெண் வீட்டார் கூலிப்படையை வைத்து சசிகுமாரை கொல்கின்றனர். ரஜினியின் நண்பரான சசிகுமாரின் மரணத்துக்கு பின்பு ரஜினி அவர்களை வேட்டையாடுகிறாராம்.

இது தான் பேட்ட படத்தின் கதை என ஒரு தகவல் வெளியாகிறது. சராசரி மனிதர்களின் சிந்தனைக்கெல்லாம் அப்பால் சிந்தித்து ஜிகிர்தண்டா, பீட்சா, மெர்குரி என படங்களைத் தந்த கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு செம கிரேஸ் இருக்கும். கதை இதுவாகவே இருந்தாலும் மனிதர் தெறிக்க விட்டிருப்பார் என காத்திருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் 10ம் தேதிக்காக!


நண்பர்களுடன் பகிர :