குடிசைத் தொழிலாக சூடுபிடிக்கும் தாமரை இலை விற்பனை... Description: குடிசைத் தொழிலாக சூடுபிடிக்கும் தாமரை இலை விற்பனை...

குடிசைத் தொழிலாக சூடுபிடிக்கும் தாமரை இலை விற்பனை...


  குடிசைத் தொழிலாக சூடுபிடிக்கும் தாமரை இலை விற்பனை...

1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமரை இலை விற்பனை சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தை "நெகிழி" இல்லாத மாநிலமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக கடந்த 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்படியான ஒரு சூழலில் இறைச்சிக் கடைகள், ஹோட்டல்கள் என பலவற்றிலும் தாமரை இலைக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளில் நிற்கும் தாமரைச் செடிகளில் இலைகளை பறித்து வந்து மொத்தமாக ஒரு இடத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர். இங்கு தாமரை இலை ஒன்று 2 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த வணிகர்களுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதேபோல் வாழை இலையின் விலையும் உயர்ந்துள்ளதால் வாழை விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பல கிராமங்களிலும் இப்போது குடிசைத் தொழில் போல் தாமரை இலை சேகரித்து விற்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :