உலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான்! அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான் Description: உலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான்! அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான்

உலகிலேயே ஒவர் ப்ரைன் நம்ம தமிழ்ப்பொண்ணு தான்! அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான்


 உலகிலேயே ஒவர் ப்ரைன்  நம்ம தமிழ்ப்பொண்ணு தான்!   அல்வாவுக்கு மட்டும் இல்ல அறிவுக்கும் நெல்லை தான்

திருநெல்வேலின்னாலே அல்வான்னு தான் எல்லாரும் சொல்லுவோம். ஆனால் அல்வா மட்டும் இல்ல, இனி அறிவுக்கும் திருநெல்வேலியை சொல்லலாம். காரணம் என்னன்னா உலகிலேயே அதிக அறிவு கொண்ட சிறுமி நெல்லை தானுங்க...நம்ம தமிழ்ப்பொண்ணுங்குறதுல நமக்கெல்லாம் பெருமை தானே? இன்னும் விரிவாக தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க...

நெல்லை விசாலினியின் தந்தை சாதாரண எலக்ட்ரீசியன். தாத்தா வெல்டராக இருந்து பின்னாட்களில் தமிழாசிரியர் ஆனவர். பரம்பரையில் யாரும் கண்டுபிடிப்புத் தொழிலில் இல்லை. ஆனால் விசாலினியோ பரந்து விரிந்த அறிவை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தார். 11வயதில் விசாலினி தனக்கான இணையதளத்தை அவரே வடிவமைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஒரே நாளில் அதை செய்து, புரட்சி செய்த சிறுமி தான் விசாலினி.

அந்த குழந்தைப்பருவத்திலேயே பல பொறியியல் கல்லூரிகளுக்கும் போய் பயிற்சி வகுப்பு எடுத்த பெருமையும் விசாலினிக்கு உண்டு. 12வயதில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இவரது தேசிய அளவிலான தலைமை இடத்துக்கு அழைத்து கொளரவித்தது. அங்குள்ள அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தும் அசத்தினார். தி பிரைட் ஆப் இந்தியா என ஹச்.சி.எல் நிறுவனத்தால் கொண்டாட்டப்பட்ட விஷாலினி அந்த இலக்கையும் தன் பதின் பருவத்திலேயே எட்டினார்.அமேசிங் இந்தியன் விசாலினி என இவரைப் பற்றி டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் அரை மணி நேரம் ஆவணப்படமும் வெளியிட்டது. அவருடைய 13வது வயதில் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான எஸ்.பி.எஸ் 174 நாடுகளில் அந்த, அந்த பிராந்திய மொழிகளில் இவரது பேட்டியை ஒளிபரப்பியது.

இவ்வளவு ஏன், நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடியே, சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து விசாலினி சந்தித்து திரும்பினார். நம் சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை தான். கம்யூட்டரில் எல்லாரும் உச்சிமுகர்ந்து பாராட்டக் கூடிய பில்கேட்ஸின் ஐக்யூ லெவல் 160. ஆனால் விசாலினிக்கோ அவரை விடவும் கூடுதல். நம் விசாலினியின் ஐக்யூ லெவல் 225!

திருநெல்வேலி அல்வாவால் மட்டும் இல்ல...அறிவாலும் இப்போ உலக அளவில் பேமஸ் தான்!


நண்பர்களுடன் பகிர :