பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க! கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி... Description: பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க! கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...

பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க! கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...


பரீட்ரை நேரமா இனி குழந்தைகளை டிவி பார்க்க விடுங்க! கல்வித்துறையில் தமிழகத்தில் புதிய புரட்சி...

தலைப்பை பார்த்துவிட்டு பீதியாகி விடாதீர்கள். முழுதாக தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்...

தமிழக அரசின் கல்வித்துறை தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. மாநில,மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களின் பெயர்களை அறிவிப்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு தடை விதித்தது. இப்போது அடுத்த பாய்ச்சலாக கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனி தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது.

வரும் 21ம் தேதி முதல் இந்த கல்வி தொலைக்காட்சி சேபல் ஒளிபரப்பாகும். இதற்கான ஸ்டூடியோ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8வது மாடியில் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த சேனலில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமாக பயிற்சி, போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கான வழிகாட்டுதல், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் போன்ற நிகழ்ச்சிகளும் துறை சார்ந்த வல்லுனர்களால் நடத்தப்படும்.

இதுபோக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சிகள், மாணவர்கள் சந்தேகங்களை நேரலையில் கேட்டு விளக்கம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. தினசரி 8 மணி நேரம் மட்டும் ஒளிபரப்பாகும் இந்த சேனலில் ஒரே நிகழ்ச்சிகள் தினசரி இரண்டு முறை ஒளிபரப்பாகும்.

இப்போ சொல்லுங்க இனி பரீட்சை நேரத்திலும் பெற்றவர்களே டிவி பார்க்கச் சொல்வார்கள் தானே?


நண்பர்களுடன் பகிர :