மரணித்த குருநாதர்: தோள்போட்டு தூக்கிச் சென்ற சச்சின்.. கிரிக்கெட்டில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் சச்சின் சிக்ஸர் தான்! Description: மரணித்த குருநாதர்: தோள்போட்டு தூக்கிச் சென்ற சச்சின்.. கிரிக்கெட்டில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் சச்சின் சிக்ஸர் தான்!

மரணித்த குருநாதர்: தோள்போட்டு தூக்கிச் சென்ற சச்சின்.. கிரிக்கெட்டில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் சச்சின் சிக்ஸர் தான்!


மரணித்த குருநாதர்: தோள்போட்டு தூக்கிச் சென்ற சச்சின்..   கிரிக்கெட்டில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் சச்சின் சிக்ஸர் தான்!

இணையத்தின் அந்த படத்தைப் பார்த்தவர்கள் ஒரு கனம் பிரமித்துப் போகிறார்கள். ஒருவரின் இறுதி ஊர்வலம் அது. அதில் தோள் போட்டு தூக்கிச் செல்வது இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இன்றைய கால இளைஞர்களின் ஆஸ்தான நாயகனாகவும் இருந்த சச்சின் டெண்டுல்கர்.

ரமாகாந்த் அச்ரேகரின் இறுதி ஊர்வலம் அது. இவர் தான் சச்சினின் ஆரம்பகால கிரிக்கெட் பயிற்றுநர். இவரிடம் தான் வித்தை கற்றார் நம் சச்சின். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது, இந்தியவ் அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள சச்சினின் பயிற்சியாளர் தனது 86வது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.இவர் குறித்து சச்சின் உருக்கமான அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில், ‘’நீங்கள் ஒரு சிறந்த பயிற்சியாளர். நான் கிரிக்கெட்டின் ஏ,பி,சி.டி உங்களிடமே பயின்றேன். நீங்கள் நேர்மையாய் வாழ மட்டுமல்ல, விளையாடவும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்த போது, சச்சினே தோள் போட்டு தூக்கி குருவுக்கு மரியாதை செய்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :