அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் அன்பால் வைரலாகும் தம்பதிகளை தெரியுமா? Description: அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் அன்பால் வைரலாகும் தம்பதிகளை தெரியுமா?

அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் அன்பால் வைரலாகும் தம்பதிகளை தெரியுமா?


அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்   அன்பால் வைரலாகும் தம்பதிகளை  தெரியுமா?

காவல் துறை அதிகாரிகள் என்றாலே பணத்துக்கு ஆளாய் பறப்பவர்கள் என்பது தான் நமது புரிதல். ஆனால் காக்கித்துறையிலும் கண்ணியமானவர்கள் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் இந்த பெண் போலீஸ்.

ஐதராபாத்தில் உஸ்மானியா ஆஸ்பத்திரி பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் இர்பான். அப்போது அழுக்குபடிந்த உடையோடு வந்த பெண் ஒருவர் அவர் கையில் தன் குழந்தையைக் கொடுத்துவிட்டு, குழந்தையை கொஞ்சம் பாத்துக் கொள்ளுங்கள். குடிக்க தண்ணீர் எடுத்துவிட்டு வருகிறேன் எனச் சொன்னார். இர்பானும் புன்முறுவலோடு குழந்தையை வாங்கிக் கொண்டார். ஆனால் குழந்தையின் தாய் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.இர்பான் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றர். அப்போது குழந்தை பசியால் பீறிட்டு அழுதது. உடனே அவர் வீட்டில் பால் காய்ச்சி கொடுத்தார். ஆனால் குழந்தை அதை குடிக்கவில்லை. இர்பானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த இர்பான் குழந்தையை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துப் போனார். அங்கு சென்ற போதும் குழந்தை அழுதுகொண்டே தான் இருந்தது.

அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ரவீந்தர் சமாதானம் சொன்னார். விளையாட்டுக் காட்டினார். ஆனால் அழுத பிள்ளை பாலுக்குத் தானே ஏங்கும். அதிலும் பால் குடி மாறாத அந்த பச்சிளங் குழந்தை தாய்ப்பாலுக்காகத் தான் ஏங்குகிறது என தன் வீட்டிலும் பச்சிளம் குழந்தையை வைத்துள்ள ரவீந்தர் நன்கு உணர்ந்தார். உடனே காவலரான தனது மனைவி பிரியங்காவுக்கு போன் செய்தார். பெண் காவலரான அவர் குழந்தை பேறு முடிந்து மருத்துவ விடிப்பில் இருந்தார். கணவர் ரவீந்தர் அழைத்ததும் வாடகை கார பிடித்துக் கொண்டு ஷ்டேசனுக்கு ஓடி வந்தார் பிரியங்கா.

அழுத குழந்தையை அள்ளி அணைத்தவர் அதை தனியாக அழைத்துச் சென்று அவரே தாய்ப்பால் கொடுத்தார். அதன் பின்னர் குழந்தையை விட்டுவிட்டு சென்ற தாயையும் தேடிபி பிடித்து போலீஸார் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். பரந்த மனப்பான்மையோடு தாய்ப்பால் கொடுத்த போலீஸ் தம்பதிகளை ஹைதராபாத் மொத்தமும் கொண்டாடி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :