ஒரு காமெடி நடிகரின் அட்ரா சக்கை ஐடியா... மஞ்சள் பை ஆன கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்... Description: ஒரு காமெடி நடிகரின் அட்ரா சக்கை ஐடியா... மஞ்சள் பை ஆன கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்...

ஒரு காமெடி நடிகரின் அட்ரா சக்கை ஐடியா... மஞ்சள் பை ஆன கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்...


ஒரு காமெடி நடிகரின் அட்ரா சக்கை ஐடியா... மஞ்சள் பை ஆன கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்...

தமிழகத்தில் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் கவர், கேரி பேக் பயன்பாட்டுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெகிழி இல்லாத தமிழகம் என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது அரசு இயந்திரம். மக்களிடமும் முன்பை விட மனமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடையின் எதிரொலியாக இறைச்சிக் கடைகளில் தாமரை இலைகளில் கறி மடக்கிக் கொடுக்கின்றனர். பனை ஓலைப் பெட்டிகளுக்கும் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதே மஞ்சள் பையை எடுத்து செல்லும் நிலை எழுந்துள்ளது. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.இந்நிலையில் காமெடியன் சேசு ஒரு சூப்பர் ஐடியா ஒன்றை தன் சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் முன்பெல்லாம் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்களை டவுசராக்கி சில காலம் பயன்படுத்துவோம். இப்போது அதற்கும் உதவாத ஜீன்ஸ் பேண்ட்களை மஞ்சள் பை ஆக்கி உள்ளோம். என ஜீன்ஸ் பேண்டால் செய்யப்பட்ட பையோடு அவர் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

உண்மையிலேயே இது செம ஐடியா தான்...உங்க வீட்டுல கூட கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் கிடக்கும் தானே?


நண்பர்களுடன் பகிர :