ஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்... Description: ஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...

ஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...


ஆட்டத்தில் தான் மோதல்.. உலக அளவில் லைக்ஸ் அள்ளும் ரிஷப் பன்ட்...

கிரிக்கெட் விளையாட்டின் போது பேச்சால் மோதிக் கொண்ட இந்திய வீரர் ரிஷப் பன்ட்டும், ஆஸ்திரேலிய கேப்டன் டீம் பெய்ன்னும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு வெளியே நல்ல நண்பர்களாயுள்ளனர்.மெல்போர்ன் டெஸ்ட் விளையாட்டு போட்டியின் மூன்றாவது நாள் அது. நம் இந்திய நாட்டின் வீரர் ரிஷப் பன்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ‘’ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் தோனி தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியுமா? இதனால் உங்களின் ஆஸ்திரேலிய விடுமுறை நாள்களின் எண்ணிக்கை குறையும். நீங்கள் ஏன் ஹோபார் ஹரிக்கேன் அணிக்காக விளையாடக் கூடாது? ஹோபார்ட் பொழுதுபோக்க சிறந்த நகரம். நீங்க என்னோட குழந்தையை பார்த்துகிட்டால், நான் என் வைய்ப்போடு சினிமாவுக்கு போய் வருவேன்” என்று சீண்டினார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டீம் பெய்ன்...

இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வெளியில் கசிந்தது. அதன் பின்னர் அதற்கு பதிலடிஉ கொடுக்கும் வகையில் டீம் பெய்ன் பேட்டிங் செய்தபோது, ‘’தற்காலிக கேப்டன் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரை அவுட் செய்ய நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். அவர் பேசுவது...பேசுவது...பேசிக் கொண்டே இருப்பதையே செய்யக் கூடியவர்.” என்று ரிஷப் பன்ட் கலாய்க்க அதுவும் வைரலானது.

ஆனால் இந்த மோதல்கள் எல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தில் தான். நிஜத்தில் அதற்கும், ஆட்டத்துக்கும் தொடர்பு இல்லை என நிரூபித்துள்ளனர் இருவரும். டீம் பெய்ன் கலாய்க்க சொன்னதைப் போலவே, அவரது குழந்தைகளை நிஜத்தில் சந்தித்தார் ரிஷப் பன்ட். ’’சிறந்த பேபி சிட்டர்’’ என ரிஷப் பன்ட், தன் குழந்தையோடு இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பெய்னின் மனைவி பாம் பெய்ன். இது உலக அளவில் ஆரோக்கியமான விஷயம் என ட்ரெண்ட் ஆகி வருகிறது.

எல்லாம் சரி, குழந்தையை ரிஷப் பன்ட் பார்த்துக்கொள்ள, டீம் பெய்ன், மனைவியோடு சினிமாவுக்கு போனாரா...இல்லையா? அதையும் சொல்லுங்க சாமியோவ்!


நண்பர்களுடன் பகிர :