தமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்... Description: தமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்...

தமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்...


தமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்...

இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்தால் கன்னடத்தில் பேசுவார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்தால் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பது புகழ் பெற்ற நகைச்சுவை. தமிழகத்தில் தமிழ் மொழியின் நிலை தேய்பிறையாகிக் கொண்டிருக்க, சிங்கப்பூர் அரசு தமிழை மெச்சி கொளரவித்து வருகிறது.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை தமிழில் எழுத அரசு சட்டம் இயற்ற வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் தமிழகத்தில், தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என அறிவித்துத் தான் தமிழை காக்க வேண்டிய நிலை உள்ளது.சிங்கப்பூரில் 4 ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. அங்குள்ள கல்விக்கூடங்களிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் பணத்தாள்களிலும் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் "சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ்சமூகத்தினர்" என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்று அண்மையில் சிங்கப்பூரில் நடந்தது. இதனை வெளியிட்டுப் பேசிய சிங்கப்பூரில் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்த வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன், "சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானம் கொண்டுள்ளது. அதனால் தான் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், பயிற்றுமொழியாக கல்விக் கூடங்களிலும் உள்ளது. இங்குள்ள இளைஞர்களிடம் தமிழை கொண்டு சேர்த்து அதை என்றும் துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்."எனப் பேச, கூட்டத்துக்கு வந்திருந்தவரின் கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது.

இப்போ சொல்லுங்க..சிங்கப்பூரில் வளர்பிறையாகவும், தமிழ்நாட்டில் தேய்பிறையாகவும் தானே நம் அன்னை தமிழ் இருக்கிறது?


நண்பர்களுடன் பகிர :