இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு Description: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு

இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு


இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு

5000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கி இருந்த புராதான சிறப்புமிக்க விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இங்கள்ள இந்தோனேசியாவில் என்பது தான் ஆச்சர்யம்!

நாகரீகமும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைவதற்கு முன்னரான மன்னராட்சி காலத்திலேயே நம் மன்னர்கள் மன்னாதி மன்னனாக இருந்தனர். படையெடுப்பின் மூலம் அண்டை நாடுகளை கைப்பற்றி அங்கு இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை நிறுவ முயற்சித்தனர் என்பது வரலாறு. இப்போது இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு கோவிலுக்கும் இப்படியான தொடர்புகள் இருக்கலாம் என ஆய்வு செய்கின்றனர் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவிற்கு அருகில் தான் கடல் பகுதியில் இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவக்க காலங்களில் கடற்கரையை ஒட்டி இக்கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும், காலப்போக்கில் பல்வேறு இயற்கை சீற்றங்களினால் கடல் மட்டம் உயர்ந்து இக்கோவில் மூழ்கியிருக்கலாம் என்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

அதெல்லாம் சரி, இந்த கோவில் இப்போது எப்படி இருக்கிறது? என்று தானே யோசிக்கிறீர்கள். இந்தோனேஷியா அரசு இதை சூப்பராக பராமரிக்கிறது. இந்த கோவிலில் அமர்ந்த நிலையில் தேவ கன்னியர்களின் சிலை, சயன நிலை எனப்படும் படுத்த நிலையில் மகாவிஷ்ணு சிலை உள்பட பல விக்கிரங்கள் உள்ளது. இந்தோனேஷியா அரசு கடலுக்கு அடியில் உள்ள இக்கோவிலின் அடியில் பூங்காவும் அமைத்து பராமரித்து வருகிறது.

இந்தோனேஷியா போனா இனி இந்த மகா விஷ்ணு கோயிலையும் பார்த்துடுங்க!


நண்பர்களுடன் பகிர :