கருவில் இருப்பது ஆணா... பெண்ணா.. : முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை.. Description: கருவில் இருப்பது ஆணா... பெண்ணா.. : முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..

கருவில் இருப்பது ஆணா... பெண்ணா.. : முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..


கருவில் இருப்பது ஆணா... பெண்ணா.. :  முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..

குழந்தை செல்வம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் முக்கிய காலக்கட்டம். கருவுற்றதுமே ஆணா, பெண்ணா என அறிந்து கொள்வதில் எந்த பெற்றோருக்கும் ஆர்வம் இருக்கும்.

இன்றைய நவீன காலத்தில் ஸ்கேன் மூலம் ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க முடியும். ஆனால் விஞ்ஞானம் வளர, வளர விபரீதமும் போட்டி போட்டு வளர்கிறது என்பார்கள். அந்த வகையில் கருவில் இருக்கும் குழந்தை ஆண் எனில் மகிழ்பவர்கள், ஸ்கேன் மூலம் பெண் எனத் தெரிய வந்தால் கருக்கலைப்பு செய்வதும் தொடர, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சோதித்து அறிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் அரசு தடை செய்துள்ளது.

ஆனால் விஞ்ஞான வளர்ச்சி பெறாத அந்த காலத்திலேயே அகத்தியர் இதுகுறித்து "கெற்பதானங்கள்" எனத் தொடங்கும், தான் எழுதிய ஒரு பாடல் மூலம் விளக்குகிறார். அதன் பொருள் இது தான். ‘’கரு உருவான காலத்தில் மூச்சுக்காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும்.

மேட்டர் சிம்பிள் தான். மூச்சுக் காற்று வலது புற நாசியில் ஓடினால் ஆன் குழந்தை, இடதுபுற நாசியில் ஓடினால் பெண்குழந்தை. அதேநேரம் மூச்சுக்காற்று சீராக இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தை குறைபாடுடன் பிறக்கும் என்பது இதன் பொருள்.

இதேபோல் குழந்தை கருவுற்ற தேதியில் இருந்து, உறுப்புகள் எந்த, எந்த மாதத்தில் இயங்கும்? குழந்தை பிறக்கும் நாள், மூளை வளர்ச்சியின்மை, திருநங்கையாக பிறப்பது என பல தகவல்களையும் இதுபோன்ற பாடல்கள் பேசுகிறது.

"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ் சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும் பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடுவூமை" இது தான் கருவில் இருக்கும் குழந்தை குறித்து பேசும் பாடல்....


நண்பர்களுடன் பகிர :