ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்க ஓடி, ஓடி வேலை: வைரலாகும் போலீஸ்காரர்... Description: ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்க ஓடி, ஓடி வேலை: வைரலாகும் போலீஸ்காரர்...

ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்க ஓடி, ஓடி வேலை: வைரலாகும் போலீஸ்காரர்...


ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்க ஓடி, ஓடி வேலை: வைரலாகும் போலீஸ்காரர்...

கேரளம் எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்த பகுதி தான். பார்க்கும் வேலையை கடமைக்கு என்றில்லாமல் மிகுந்த ஈடுபாட்டோடு செய்பவர்களும் அங்கு அதிகம். அப்படித்தான் கேரளாவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழி ஏற்படுத்த காவலர் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

கேரளாவின் கோட்டயம் பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. அதுவும் விடுமுறை காலம் எனில் கேட்கவே வேண்டாம். அதிலும் புத்தாண்டுக் காலம் என்பதால் அதையொட்டிய கொண்டாட்டங்கள், பர்சேஜ் என கோட்டயம் சாலைகள் பிசியோ பிசி. இதற்கு இடையில் கோட்டயத்தில் போக்குவரத்து நெருக்கடியில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது. இதை அப்பகுதியில் டியூட்டியில் இருந்த ரெஞ்சித் குமார் ராதாகிருஷ்ணன் என்ற காவலர் பார்த்தார்.

உடனே அவர் ஓடி சென்று ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தும் செயலில் இறங்கினார். அவர் இதற்காக ஓடி, ஓடி வழி ஏற்படுத்தும் காட்சிகளை ஆம்புலன்ஸில் இருந்த ஒருவர் வீடோ எடுத்துள்ளார். அதை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரல் ஆகிவருகிறது. அதில் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை விட்டு வெளியே வரும் வரை அதன் முன்னாலேயே ஓடுகிறார் காவலர் ரெஞ்சித் குமார் ராதாகிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் சென்னையில் ஒருநாள் படத்தில் பார்த்ததை விட நிஜத்தில் நல்ல போலீஸாக இருக்கும் இவரை நாமும் வாழ்த்துவோமே!...


நண்பர்களுடன் பகிர :