புத்தாண்டில் நடிகர் விஷாலுக்கு டும்..டும்..டும்.. Description: புத்தாண்டில் நடிகர் விஷாலுக்கு டும்..டும்..டும்..

புத்தாண்டில் நடிகர் விஷாலுக்கு டும்..டும்..டும்..


புத்தாண்டில் நடிகர் விஷாலுக்கு டும்..டும்..டும்..

நடிகர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், வெற்றிகரமான நடிகர் என குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகர் விஷால். நீண்டகாலமாக கல்யாணத்தை தள்ளிப் போட்டவர் இந்த நியூ இயரில் கமிட் ஆகிவிட்டார்.

ஆக்‌ஷன்கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் நடிகர் விஷால். செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் மெகா ஹிட் ஆனது. அடுத்தடுத்து வந்த அவரது படங்களும் வெற்றி பெற முழுநேர நடிகர் ஆனார். அவரே சில படங்களை சொந்தமாக தயாரித்து தயாரிப்பாளர் ஆகவும் உயர்ந்தார்.

நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டிய பின்பு திருமணம் செய்வேன் என்றும் சொல்லி வந்தார். இப்போது அவருக்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டனர். ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் ,மகளான அனிஷா என்பவரை மணக்கிறார் விஷால். மார்ச் மாதத்தில் இவர்களின் நிச்சயதார்த்தை ஹைதராபாத்தில் நடத்த இரு வீட்டாரும் பணிகளை தொடங்கி விட்டனர்.

சீக்கிரமே சண்டக்கோழியின் கல்யாண சேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்!


நண்பர்களுடன் பகிர :