தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு! இது ஜீவகாருண்ய ஆச்சர்யம்... Description: தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு! இது ஜீவகாருண்ய ஆச்சர்யம்...

தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு! இது ஜீவகாருண்ய ஆச்சர்யம்...


தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு!   இது ஜீவகாருண்ய ஆச்சர்யம்...

"அம்மா" என்ற வார்த்தையின் வலிமை பெரியது. ஆறறிவு படைத்த மனிதர்களுக்குத் தான் என்றில்லை. ஐந்தருவி படைத்த ஜூவராசிகளுக்கும் அம்மா என்றால் கிரேஸ் தான்.

சிறுவயதில் தாயை பறிகொடுத்த குழந்தைகளை, உறவுக்காரர்கள் தாயாக இருந்து பார்த்துக் கொள்வது வழக்கம். அதே போல் இங்கு 5 குட்டிகளை போட்டு விட்டு இறந்து போன தாய் நாய் ஒன்று இறந்து போனது. அந்த ஐந்து குட்டிகளுக்கு பால் கொடுத்து இப்போது பராமரிப்பது மற்றொரு நாய் கூட இல்லை. அது பசு மாடு என்பது தான் ஆச்சர்யம்!

தாய் நாயை இழந்து தாய் பாலுக்கு ஏங்கும் இந்த ஐந்து குட்டி நாய்களுக்கும் தினசரி சாலையோரம் அலைந்து திரியும் பசு மாடு ஒன்று உரிய நேரத்தில் வந்து பால் கொடுக்கின்றது. பொதுவாக பசு தன் கன்றுக்கு பால் கொடுக்கும் போது, நின்ற நிலையில் கொடுப்பதே வழக்கம். கன்றும் தன் தாயை முட்டி, முட்டி பால் குடிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் குட்டி நாய்களுக்கு நின்ற நிலையில் பால் கொடுத்தால் எட்டாது என்பதால் இந்த பசு அதற்கென அமர்ந்த நிலையில் கொடுக்கிறது.

தாய்ப்பாசத்துக்கு மிஞ்சி வேறு என்ன இருந்து விட முடியும்?நண்பர்களுடன் பகிர :