சங்கமா? சாப்பாடா? வைரலாகும் பொடியன்... Description: சங்கமா? சாப்பாடா? வைரலாகும் பொடியன்...

சங்கமா? சாப்பாடா? வைரலாகும் பொடியன்...


சங்கமா? சாப்பாடா? வைரலாகும் பொடியன்...

இணையத்தில் எப்போது யார் பேமஸ் ஆவார்கள் என்பதே கணிக்க முடியாத ஒன்று. ’குணமா வாயில சொல்லணும்’ என பேசி திருப்பூர் சிறுமி அண்மையில் பேமஸ் ஆகியிருந்தார். அதேபோல் இப்போது இன்னொரு பொடியனை வைரலாக்கி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

வீடீயோவில் வரும் மேட்டர் இது தான். இரண்டரை வயது மதிக்கத்தக்க பொடியனிடம், ‘’நம் இளைஞரணி சங்கத்தில் இப்போது நீ சேர்ந்து விட்டாய். உங்க அம்மாவிடம் கடனுக்கு 2000 ரூபாய் வாங்கிட்டு வா” என்கிறார் ஒருவர். பதிலுக்கு பொடியனும் ம்ம்ம்ம்ம்ம் என தலையை உருட்டுகிறார்.

சரியா வருவியா எப்படி என்று கேட்டதும், பொடியன் ம்ம்ம்ம் எனச் சொல்லிவிட்டே ‘’சாப்டுட்டு வாரேன்” என்கிறான். அதற்கு ‘’சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? “என மீண்டும் கேட்கிறார் பணம் கேட்டவர். சிறுவன் சற்றும் யோசிக்காமல், ‘’சாப்பாடு முக்கியம்” என்கிறான். இதைக் கேட்டதும் சுற்றி இருக்கும் குழந்தைகள் சிரிக்கிறார்கள். உடனே பணம் கேட்டவர், சங்கத்தில் உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியமா? என பொடியனை வம்புக்கு இழுக்க ‘’அப்போ எனக்கு பசிக்குமுல்ல...சாப்பிடக் கூடாதா?”என அழுதுகொண்டே கேட்கிறான் பொடியன்...

தாறுமாறாய் லைக்ஸ் தட்டி, பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.நண்பர்களுடன் பகிர :