அடடே... தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா? Description: அடடே... தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா?

அடடே... தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா?


அடடே... தயிரில் இவ்வளவு விஷயம் இருக்கா?

அன்றாட உணவுப் பழக்கத்தில் கட்டித் தயிரை சேர்த்துக் கொள்வதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

மாதுளம் பழத்தோலை அரைத்து தயிரில் கலந்து குடித்தால் சீதபேதி ஒடிவிடும். தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். உடலுக்கு அருமருந்தான தயிர் குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரணசக்தியை தருவதும் தயிர் தான். பால் குடித்தால் அது ஒருமணி நேரத்தில் வெறும் 25 சதவிகிதம் தான் ஜீரணமாகி இருக்கும். ஆனால் தயிர் 95 சதவிகிதம் அந்த நேரத்தில் ஜீரணமாகிவிடும். தயிரில் இருக்கும் பாக்டீரீயாக்கள் ஜீரணசக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரீயாவையும் தயிர் அதிகரிக்கிறது.

வயிறு சம்பந்தமான உபாதைகள் இருக்கும்போது, வெறுமனே தயிர் சோறாவது சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் வெந்தயம்_தயிர் 1 கப் சேர்த்து சாப்பிட வயிற்றுப் பொருமல் நீங்கும். பெண்களுக்கு தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் அதிக அளவில் கால்சியம் கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்ட தயிரை இனி சோற்றில் சேர்க்க மறக்காதீங்க...


நண்பர்களுடன் பகிர :