இப்படியும் ஒரு காலண்டர்: இது மோட்டிவேசன் ஸ்பெசல்... Description: இப்படியும் ஒரு காலண்டர்: இது மோட்டிவேசன் ஸ்பெசல்...

இப்படியும் ஒரு காலண்டர்: இது மோட்டிவேசன் ஸ்பெசல்...


இப்படியும் ஒரு காலண்டர்: இது மோட்டிவேசன் ஸ்பெசல்...

இது புத்தாண்டு காலம். இல்லங்கள் தோறும் காலண்டர்களும் மாறும் காலம். வித, விதமாகவும், வண்ணமயமாகவும் இன்று பல காலண்டர்கள் வந்துவிட்டன. ஆனால் கோவில்பட்டியில் ஒரு பள்லிக் கூடம் சார்பில் போடப்பட்டுள்ள காலண்டர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பொதுவாக நாம் பார்த்துப் பழகிய காலண்டர்களில் பண்டிகைகள், தேசிய பொது விடுமுறை, தலைவர்களின் பிறந்தநாள்கள் ஆகியவை தானே இருக்கும். இதில் தான் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியினர் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். இதில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பிறந்தநாள் தினத்தில் அதைக் குறிப்பிடும் வகையில் அவர்களது கலர்ப் புகைப்படத்தை அதில் அச்சிட்டு உள்ளனர்.

இவை இந்த காலண்டரில் எதிர்காலச் சாதனையாளர்கள் அவர்கள் பிறந்த தேதியில் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போ இது மோட்டிவேசன் காலண்டர் தானே?


நண்பர்களுடன் பகிர :