மகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர் Description: மகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர்

மகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர்


மகனை அடகு வைத்து கடன் வாங்கிய தந்தை: இது தஞ்சை துயர்

தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குபவர்கள் பலர் உண்டு. ஏன் வீட்டைக் கூட அடகு வைத்து கடன் வாங்குவார்கள். ஆனால் விவசாயி ஒருவர் புயல் பாதிப்பினால் ஏற்பட்ட கஷ்டத்தினால் தன் மகனை அடகு வைத்து கடன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதியினருக்கு சக்தி, பெரமையன், என்ற இரு மகன்களும், காமாட்சி என்ற மகளும் உள்ளனர். மாரிமுத்து அப்பகுதியில் ரகுமான் என்பவரது தோப்பில் குடிசை அமைத்து குடும்பத்தோடு தங்கியிருந்து தோப்பை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கஜா புயலால் இவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, மொத்த குடும்பமும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

குடிசை வீடு பலத்த சேதமான நிலையில் நிலத்தின் உரிமையாளரும் உதவவில்லை. போராடி ஓய்ந்தவர் கடைசியில் 12 வயதே ஆன தனது இளைய மகன் பெரமையனை நாகப்பட்டிணம் மாவட்டம், பனங்குடி கிராமத்தை சேர்ந்த ரெட்டி திருவாசல் சந்துரு என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். சந்துரு ஆடு மேய்ப்பதற்காக சிறுவனை அடகு பிடித்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தில் தகவல் கசிய சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு இப்போது தஞ்சை குழந்தைகள் நல காப்பகத்தில் சேத்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :