வெயிட்டைக் குறைக்க வெளிநாடு போகும் சிம்பு... Description: வெயிட்டைக் குறைக்க வெளிநாடு போகும் சிம்பு...

வெயிட்டைக் குறைக்க வெளிநாடு போகும் சிம்பு...


வெயிட்டைக் குறைக்க வெளிநாடு போகும் சிம்பு...

தமிழ்த் திரையுலகில் மன்மதன் ஆக வலம் வந்தவர் சிம்பு. சமீபகாலமாக இவரது படங்கள் எதுவும் பெரும் வெற்றி பெறவில்லை. மிகுந்த எதிர்பார்ப்போடு களத்துக்கு வந்த அன்பானவன் அடங்காதவன் அசராதவனும் கைவிட, அதன் பின்பு மணிரத்தினம் இயக்கத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் சிம்புவுக்கு கை கொடுத்தது.

தற்போது சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் "வந்தா ராஜாவா தான் வருவேன்" என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் விறு,விறுப்பாக படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் "மாநாடு" என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் சிம்பு, இப்படத்தில் சிக்கென்ற மன்மதன் சிம்பு தான் வேண்டும் என வெங்கட் பிரபு கண்டிஷன் போட்டுள்ளார். ஆனால் சிம்பு அண்மைக்காலமாக ஊதிய நிலையில் உள்ளார்.

வெங்கட்பிரபுவின் வேண்டுகோளுக்கு இணங்க உடம்பை குறைக்க முடிவு செய்தார் சிம்பு. அப்போது படத்தில் ஒரு சண்டைக்காட்சிக்காக தற்காப்பு கலை தெரிய வேண்டும் என வெங்கட்பிரபு அடுத்த விசயத்தை சொல்ல, ஒகே இரண்டையும் சேர்த்தே செஞ்சுரலாம் என அதற்காகவே பாரினுக்கு செல்கிறார் சிம்பு.


நண்பர்களுடன் பகிர :