இப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்.. Description: இப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்..

இப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்..


 இப்படியும் ஒரு முதலாளி...நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம்..

நாள் முழுக்க ஓடாய் உழைக்க விட்டு மாதம் பிறக்கையில் சம்பளம் கொடுக்கவே அலுத்துக் கொள்ளும் பல முதலாளிகளைப் பார்த்திருப்போம். ஆனால் இறந்து போன தன் தொழிலாளருக்காக்ச் நாடு விட்டு நாடு வந்து நேசக்கரம் நீட்டி அசத்தியுள்ளார் ஒரு முதலாளி!

சவுதி அரேபியாவில் உள்ளது ஹெயில் நகரம். இங்கு மிஸ்பர் அல் சமாரி என்பவரின் தந்தை ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். வயது ஏறியதைத் தொடர்ந்து கம்பெனியின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார் மிஸ்பர் அல் சமாரி. இவரது தந்தை காலத்தில் இந்திய இளைஞர் ஒருவர் அவரிடம் வேலை செய்தார். இந்நிலையில் திடீரென இந்திய இளைஞருக்கு தாய்நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. கம்பெனிக்கோ அது நெருக்கடியான சூழல், நீ ஊருக்கு போனாலும் சம்பளம் தேடி வரும் எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மிஸ்பரின் தந்தை.இந்நிலையில் துரதிஷ்டவசமாக இந்திய இளைஞர் இங்கு நடந்த சாலைவிபத்தில் மரணம் அடைந்தார். இதுகுறித்து தெரிய வந்ததும் சவுதி தொழிலதிபர் தன் மகன் அல்சமாரியிடம் எப்படியாவது சம்பளப் பணத்தை கொடுக்க சொன்னார். அதன் பின்னர் தூதரகம் மூலம் இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்து 6000 ரியால்(இந்தியப் பணத்தில் 1,12,000 ரூ) கொடுத்தார்.

தன் தந்தையிடம் இந்த தகவலைச் சொல்ல அல்சமாரி சவுதிக்குச் செல்ல, வயது முதிர்வினால் அவரது தந்தையும் இறந்து போனர்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை இறைவனுக்கும் மிக பிடித்துத் தான் தன் பக்கம் அழைத்துக் கொள்கிறாரோ என்னவோ!


நண்பர்களுடன் பகிர :