பேட்ட, விஸ்வாசத்தோடு மோதும் மன்மோகன்சிங்! Description: பேட்ட, விஸ்வாசத்தோடு மோதும் மன்மோகன்சிங்!

பேட்ட, விஸ்வாசத்தோடு மோதும் மன்மோகன்சிங்!


பேட்ட, விஸ்வாசத்தோடு மோதும் மன்மோகன்சிங்!

பேட்ட, விஸ்வாசம் இடையே போட்டி இருப்பது ஊர் அறிந்த செய்தி. இதற்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் உருவாகி விட்டது. கடந்த 2004 முதல் 2009 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் பிரமராக இருந்தவர் மன்மோகன்சிங். மீண்டும் 2009 தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற மன்மோகன்சிங்கே பிரதமராக்கப்பட்டார். இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து,அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய்பாரு,"the accidental prime minister" என்னும் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை எழுதினார்.

இந்த புத்தகத்தை மையமாக வைத்து இயக்குனர் விஜய்ரத்னாகர் ஹிந்திப் படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் அனுபம் கெர் மன்மோகன்சிங் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வட இந்தியாவிலும் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை வெளியாக உள்ளது. இவைகளுக்குப் போட்டியாக வரும் 11ம் தேதி வருகிறது மன்மோகன்சிங் படம்!


நண்பர்களுடன் பகிர :