எல்லை தாண்டும் விஸ்வாசம்.. Description: எல்லை தாண்டும் விஸ்வாசம்..

எல்லை தாண்டும் விஸ்வாசம்..


எல்லை தாண்டும் விஸ்வாசம்..

இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு ‘தல பொங்கல்’ தான். சாதாரணமாக அஜித் படம் ரிலீஸ் ஆகும் நாளிலேயே அமர்க்கப்படுத்துவார்கள். அதுவும் பொங்கலுக்கே படம் வருகிறது என்றால் கேட்கவா வேணும்?

பொங்கல் ரேசில் ரஜினியின் பேட்டயும், அஜித்தின் விஸ்வாசமும் மோதுகிறது. ஏற்கனவே இரண்டில் எது மரண மாஸ் ஹிட்டடிக்கும் என இருதரப்பு ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இப்போது தித்திப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் ரிலீஸாகும் அதேநாளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிலும் ரிலீசாகிறது விஸ்வாசம். இவ்விரு நாடுகளிலும் அஜித் படம் வெளியாவது இதுவே முதல்முறை. இன்னும் சொன்னால் இவ்விரு நாடுகளிலும் வெளிவரும் நான்காவது தமிழ் படமே இதுதான்.

பிறகென்ன தல ரசிகர்கள் காலரைத் தூக்கி விடலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :