கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஆரோக்கியமில்லாமல் போகும் அரசு மருத்துவமனைகள் Description: கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஆரோக்கியமில்லாமல் போகும் அரசு மருத்துவமனைகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஆரோக்கியமில்லாமல் போகும் அரசு மருத்துவமனைகள்


கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஆரோக்கியமில்லாமல் போகும் அரசு மருத்துவமனைகள்

பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை சிகிட்சைக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு வீதிக்கு வந்து கூவி வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எய்ட்ஸ் நோய்க்கிருமி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி இரண்டாவது முறையாக கருத்தரித்தார். எட்டு மாதம் ஆன நிலையில் அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரத்தம் குறைவாக இருப்பதாக இரத்தம் அடைக்க சொல்லியுள்ளனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் இரத்தம் ஏற்றிச் சென்ற பின்னர் மூன்றாவது நாளிலேயே அவர் உடல் பலவீனத்தால் தவித்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த சோதித்த போது, அவருக்கு அரசு மருத்துவமனையில் ஏற்றிய இரத்தத்தில் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை மூன்று ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தற்காலிக அரசு வேலை வழங்குவதாகத் தெரிவிக்க எனக்கு அரசுப் பணியே வேண்டாம். என் மனைவியை நல்ல தனியார் மருத்துவமனயில் சேர்த்து நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார் கணவர்.

ஆஸ்பத்திரிக்குப் போவதே நோயைக் குணமாக்கத்தான். ஆனால் அந்த ஆஸ்பத்திரியே நோயைத் தந்தால்? அதுவும் உயிர்கொல்லும் எய்ட்ஸை? அந்த கர்ப்பிணி நலம் பெற நாமும் பிரார்த்திப்போம்...


நண்பர்களுடன் பகிர :