சுனாமி சோகத்தை எதிர்த்து போராடி மீண்டு வந்த பெண்.. இது ஒரு அம்மாவின் கதை: இன்று சுனாமி நினைவுநாள் Description: சுனாமி சோகத்தை எதிர்த்து போராடி மீண்டு வந்த பெண்.. இது ஒரு அம்மாவின் கதை: இன்று சுனாமி நினைவுநாள்

சுனாமி சோகத்தை எதிர்த்து போராடி மீண்டு வந்த பெண்.. இது ஒரு அம்மாவின் கதை: இன்று சுனாமி நினைவுநாள்


சுனாமி சோகத்தை  எதிர்த்து போராடி மீண்டு வந்த பெண்.. இது ஒரு அம்மாவின் கதை: இன்று சுனாமி நினைவுநாள்

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் கோரதாண்டவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திவிட முடியாது. கொத்து, கொத்தாய் மனிதர்கள் மாண்டு போனார்கள். ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு சராசரி வாழ்க்கை வாழும் ஒரு சாதனைப் பெண்ணின் கதை தான் இது!

குமரி மாவட்டம் கொட்டில்பாடு கிராமத்தை சேர்ந்த ஆக்னஸ் தான் அந்த சாதனைப் பெண்மணி.அருண் பிரமோத்,பிரதீமா, பிரதீஷா, ரஞ்சிதான்னு நாலு பிள்ளைங்க இவங்களுக்கு இருந்தாங்க. சுனாமி அலை வீசுனப்போ மாயமான நாலு பேரும் கிடைக்கவே இல்லை. அதாவது ஆழிப்பேரலை இந்த பிஞ்சுகளை வாரிச் சுருட்டி கடலுக்குள்ள கொண்டு போயிடுச்சு. ஆக்னஸ் இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டாங்க. பல தடவை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணிருக்காங்க.

இது பத்தி தெரிஞ்சுகிட்டு வந்த சர்க்கார் ஆபீஸர்ஸ் கவுன்சிலிங் கொடுத்துருக்காங்க. கடைசியா குடும்ப கட்டுப்பாட்டு சிகிட்சையை ரத்து செஞ்சு மறுபடியும் குழந்தை பெத்துக்குறதுக்கு அறுவை சிகிட்சை பண்ணி, இப்போ ஆக்னஸ் மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். இறந்து போன பிள்ளைகள் நினைவாக அதே பெயரில் ஆரோக்கியமும் சேர்த்து வைத்துள்ளார் ஆக்னஸ்!


நண்பர்களுடன் பகிர :