நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டி? Description: நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டி?

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டி?


நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டி?

தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் ஒருகாலத்தில் ஜெயலலிதாவை எதிர்த்தே அரசியல் செய்தவர். சட்டசபையில் அவர் ஜெயலலிதாவை திமுகவை விட பலத்துடன் எதிர்த்தும் நின்றார். ஆனால் அண்மைக்காலமாக அவர் உடல்நலமின்மையால் தவித்து வருகிறார். இப்போதும் சிகிட்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் இல்லாத தேமுதிக களை இழந்துவிடக் கூடாது என இன்று தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவுக்கு இன்று தலைமை ஏற்றது கேப்டனின்மகன் விஜயபிரபாகரன். அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி கேக் வெட்டி, பிரியாணியும் வழங்கினார்.

சும்மாவே மைக் நீட்டும் மீடீயோக்கள் கேப்டன் மகனை விட்டு விடுவார்களா? அவர் முன்பும் மைக் போட, அவரோ, ‘’கேப்டன் விரைவில் பூரணநலம் பெற்று நாடு திரும்புவார். தேமுதிகவில் எந்த குழப்பமும் இல்லை. நாடாளுமன்றத்தேர்தல் கூட்டணி குறித்து, தேர்தல் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும். நான் எதற்கும், யாரைப் பார்த்தும் அஞ்ச மாட்டேன் என்றவர் தலைமை சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன்”என்றும் சொல்லி சென்றார். .


நண்பர்களுடன் பகிர :