தாயை கொன்ற மகள்: விபரீதம் ஆன முகநூல் காதல்.. Description: தாயை கொன்ற மகள்: விபரீதம் ஆன முகநூல் காதல்..

தாயை கொன்ற மகள்: விபரீதம் ஆன முகநூல் காதல்..


தாயை கொன்ற மகள்: விபரீதம் ஆன முகநூல் காதல்..

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமம் ஆஞ்சநேயபுரம் எட்டாவது தெருவில் வசிப்பவர் திருமுருகன். இவரது இரண்டாவது மகள் தேவிபிரியா. அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வரும் தேவிப்பிரியா பெரும்பொழுதுகளை முகநூலில் செலவிட்டு வந்துள்ளார்.

இதில் மைசூரைச் சேர்ந்த விவேக் என்பவரோடு முகநூலில் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு மெல்ல, மெல்ல காதலாக வளர்ந்தது. முகம் தெரியாமலே விவேக்கின் மீது காதலை வளர்ந்துக் கொண்டார் தேவிப்ப்ரியா. இவ்விசயம் அவரது தாயார் பானுமதிக்குத் தெரியவர பிரச்னை வெடித்தது. கல்லூரிக்கும் தேவிப்பிரியாவை விடவில்லை. இதுகுறித்து அவர் தனது காதலன் விவேக்கிற்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர் இவரை வந்து அழைத்துச்செல்ல நண்பர்கள் சுரேஷ், விக்னேஷ் ஆகியோரோடு தேவிப்பிரியா வீட்டுக்கு சென்றுள்ளார் விவேக்.

இதைப்பார்த்த தாயார் பானுமதி தேவிப்பிரியாவை வெளியே செல்லவிடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தேவிப்பிரியா தன் தாயாரையே கத்தியால் குத்தி கொலை செய்தார். சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வந்த விவேக்கின் நண்பர்கள் இருவரையும் பிடித்தனர் அவர்களையும் தேவிப்பிரியாவையும் போலீஸில் ஒப்படைத்தனர்.

காதலனுடன் கம்பி நீட்ட முயன்றவர் தாய்வை கொலை செய்து விட்டு இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..


நண்பர்களுடன் பகிர :