வெளியீட்டுக்கு பின்னர் கத்திரி போடப்பட்ட சீதக்காதி..

விஜய் சேதுபதி நடித்து, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் சீதக்காதி.
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி 70வயது முதியவராக நடித்துள்ளார். சமீபகாலமாக வந்த படங்களில் மிக நீளமான படம் இதுதான். சரியாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் நீளம் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி வருவது என்னவோ முதல் 40 நிமிடங்கள் தான். சேரன் நடித்து இயக்கிய தவமாய் தவமிருந்து படத்துக்கு பின்னர் கோடம்பாக்கம் கண்ட நீளமான படம் இதுதான்.
விஜய் சேதுபதியே இல்லாமல் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நகரும் இக்கதை திரைப்பிரியர்களிடம் எதிர்மறை விமர்சனத்தைப் பெற்றது. இதனால் பல திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு, இந்த வெள்ளி ரிலீசான மற்றப் படங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. வெளியீட்டுக்கு பின்னர் இரண்டொரு நாளில் வந்த விமர்சனத்துக்கு பின்னர் சுதாகரித்துள்ளது படக்குழு. இப்படத்தில் சில தொய்வான காட்சிகள் நீக்கப்பட்டு, இன்று முதல் 2.30 மணி நேரத்தில் முடியும்மாறு படம் மாற்றப்பட்டுள்ளது.
இது ரசிகர்களுக்கு போர் அடிக்காது. என மார் தட்டுகிறது படக்குழு..பார்ப்போமே?