எப்படி இருந்த பாட்டி இப்படி ஆகிட்டாங்க? கைவிட்ட கோடம்பாக்கம்... கர்சிப் விற்கும் நடிகை Description: எப்படி இருந்த பாட்டி இப்படி ஆகிட்டாங்க? கைவிட்ட கோடம்பாக்கம்... கர்சிப் விற்கும் நடிகை

எப்படி இருந்த பாட்டி இப்படி ஆகிட்டாங்க? கைவிட்ட கோடம்பாக்கம்... கர்சிப் விற்கும் நடிகை


எப்படி இருந்த பாட்டி இப்படி ஆகிட்டாங்க?  கைவிட்ட கோடம்பாக்கம்... கர்சிப் விற்கும் நடிகை

"போறதே போற அந்த நாயை ச்சூன்னு சொல்லிட்டுப் போ" என நகைச்சுவை காட்சி ஒன்றில் வடிவேலுவுடன் அதகளம் செய்யும் பாட்டியை நினைவிருக்கிறதா? ஆ! ரங்கம்மா பாட்டி.

பாட்டி, பியூட்டியாக இருந்த காலம் தொட்டே தமிழ் சினிமாவில் இருக்கிறார். இதுவரை 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் காலம் தொட்டே சிறு, சிறு பாத்திரங்களில் நடித்து வரும் ரங்கம்மா அஜித், விஜய் படங்களிலும் கூட நடித்துள்ளார். ச்சூ காமெடி ஹிட் ஆனதால் கோடம்பாக்கத்தில் ச்சூ ரங்கம்மா என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்.

500க்கும் அதிகமான படங்களில் நடித்தாலும், இப்போது பட வாய்ப்புகள் இன்றி தனிமையில் தவித்து வருகிறார். 9 பிள்ளைகள் பெற்றும் வாரி அணைத்துக் கொள்ளும் ஒரு பிள்ளையும் பெறாதவர், இப்போது சென்னை மெரீனா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். கோடி, கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்களின் கடைக்கண் பார்வை ச்சூ பாட்டியின் மீது படியாவிட்டால் திரைத்துறையினரை பார்த்து ச்சீ என்று விடுவார்கள் மெரினாவாசிகள்!


நண்பர்களுடன் பகிர :