இந்த டீக்கடைக்காரரை பாராட்டாமல் இருக்க முடியாது. பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் பகவான் தான்! Description: இந்த டீக்கடைக்காரரை பாராட்டாமல் இருக்க முடியாது. பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் பகவான் தான்!

இந்த டீக்கடைக்காரரை பாராட்டாமல் இருக்க முடியாது. பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் பகவான் தான்!


இந்த டீக்கடைக்காரரை பாராட்டாமல் இருக்க முடியாது.  பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் பகவான் தான்!

கஜா புயல் தமிழகத்தில் ஆடிய கோரதாண்டவத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. புயலில் நிஜத்திலேயே பகவானாக மாறியுள்ளார் ஒரு டீக்கடைக்காரர்!

புயலுக்கு பின்னர் அமைதி என்பது பழமொழி. ஆனால் கஜா புயல் கோர தாண்டவம் ஆடிய பகுதிகள் இன்னும் அமைதியாகவில்லை. விவசாயிகள் உள்பட பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பலரது வாழ்க்கை ஜீரோ ஆகியுள்ளது. மத்திய அரசிடம் நிதி கேட்டு மாநில அரசு காத்துள்ளது. விவசாயிகளின் பயிர்க்கடன் உள்ளிட்டவைகளை தள்ளுபடி செய்யக் கேட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால் செயலில் இறங்கி விட்டார் ஒரு டீக்கடைக்காரர். புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் ரோடு பகுதியில் உள்ள பகவான் டீ ஸ்டால் உரிமையாளர் தனது கடையில் கஜா புயலால் இதுவரை தனது கடையில் பாக்கி வைத்திருந்த யாரும் பாக்கியை செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளார். பழைய பாக்கிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று பதாகையும் வைத்துள்ளார்.

லட்சங்களில் புரள்பவர்களை விட எளிய மக்கள் எப்ப்போதும் அன்பால் உயர்ந்தவர்கள் என்றும் இவர் காட்டியுள்ளார். கடையின் பெயரில் மட்டுமல்ல...நிஜத்திலும் இவர் பகவான் தானே?


நண்பர்களுடன் பகிர :