இப்படியும் கொண்டாடலாம் கிறிஸ்துமஸை... ஒரு அட்ராசக்கை கிராமம்! Description: இப்படியும் கொண்டாடலாம் கிறிஸ்துமஸை... ஒரு அட்ராசக்கை கிராமம்!

இப்படியும் கொண்டாடலாம் கிறிஸ்துமஸை... ஒரு அட்ராசக்கை கிராமம்!


 இப்படியும் கொண்டாடலாம் கிறிஸ்துமஸை...  ஒரு அட்ராசக்கை கிராமம்!

நாடெல்லாம் இயேசு பிறப்பு கிறிஸ்துமஸை கொண்டாடும் வேளையில் ஒரு கிராம மக்களின் கொண்டாட்டம் அட போட வைக்கிறது.கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸை வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதிலும் இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைத்து குதூகலப்படுவர். இயேசு கிறிஸ்து பிறந்தது என்னவோ ஆட்டுத் தொழுவத்தில் தான் என்றாலும் குடில்கள் ஆடம்பரமாகவே அமைக்கப்படுகிறது. அதிலும் போட்டி வைத்து, அதற்கென பல லட்சங்கள் செலவு செய்யும் சூழலும் வந்துவிட்டது.

ஆனால் இந்த காலத்திலும் கூட குமரி மாவட்டம் செந்தறை கிராமத்தில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? குடில் அமைக்கும் பணத்தில் ஊரில் ஒரு ஏழையை தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த பணத்திலேயே வீடு கட்டிக் கொடுக்கின்றனர். ஏற்கனவே இப்படி இரண்டு வீடுகள் கட்டிக் கொடுத்த நிலையில், நாளை கிறிஸ்துமஸ் நாளில் மூன்றாவது வீட்டுக்கான திறப்பு விழா நடக்கிறது.

கிறிஸ்துமஸ் நாளில் செய்யும் இப்பணிக்கு தாறுமாறாய் லைக்ஸ் தட்டலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :