லத்தியை காட்டாமல் அன்பைக் காட்டும் போலீஸ் எஸ்.ஐ இப்படியும் ஒரு மனிதநேய போலீஸா? Description: லத்தியை காட்டாமல் அன்பைக் காட்டும் போலீஸ் எஸ்.ஐ இப்படியும் ஒரு மனிதநேய போலீஸா?

லத்தியை காட்டாமல் அன்பைக் காட்டும் போலீஸ் எஸ்.ஐ இப்படியும் ஒரு மனிதநேய போலீஸா?


லத்தியை காட்டாமல் அன்பைக் காட்டும் போலீஸ் எஸ்.ஐ இப்படியும் ஒரு மனிதநேய போலீஸா?

காக்கிச் சட்டைக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாகவே சாலையோரங்களில் நின்று கொண்டு வாகனங்கள் வருவதைப் பார்த்ததும் சீறிப் பாய்ந்து வந்து லத்தியைக் காட்டி நிறுத்தி வாகன தணிக்கை செய்யும் பல போலீஸ்காரர்களைப் பார்த்திருப்போம். வாகன தணிக்கையினாலேயே ஏராளமான விபத்துகள் நடப்பதையும் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு ஒரு காவலர் என்ன செய்தார் தெரியுமா?

சிங்காநல்லூர் போக்குவரத்து எஸ்.ஐயான முருகன் அவரது ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தினார் எஸ்.ஐ முருகன். அவர் தலையில் ஹெல்மெட் மாட்டியிருந்தார். வணிக்கான ஆர்.சி புக் வைத்திருந்தார். வண்டியின் நம்பர் பிளேட்களில் கூட அரசு நிர்ணயித்த அளவுக்கே எழுத்துருக்களை பயன்படுத்தி இருந்தார். வாகனம் ஒட்டுவதற்கு உரிய லைசன்ஸ்ம் வைத்திருந்தார். ஆனால் அவரது இன்சூரன்ஸ் மட்டும் காலாவதியாகி இருந்தது.அப்போது அந்த வாகனஓட்டி, தான் வறுமையான சூழலில் இருப்பதாகவும், அதனாலேயே வாகனத்துக்கான இன்சூரன்ஸ் கட்ட முடியவில்லை எனவும் தன் குடும்ப பொருளாதார சூழலை எடுத்து வைத்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு, ‘உன் சோக கதையை கேட்கவா நான் இருக்கேன். கோர்ட்ல கட்டுனா 1000 இங்க கவனிச்சா 300”ன்னு சொல்லும் சராசரி போலீஸைப் போல் எஸ்.ஜ முருகன் இல்லை.

அவர் செய்த செயலால் ஏரியாவாசிகள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். எஸ்.ஐ.முருகன் வாகன ஓட்டியின் ஏழ்மையை கணக்கிட்டு அவருக்கான இன்சூரன்ஸ் தொகை 1200 ரூபாயை தன் கைக்காசைப் போட்டு கட்டியுள்ளார்.

காக்கிகள் முருகன் போன்றவர்களால் தங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்!


நண்பர்களுடன் பகிர :