இப்போது என்ன செய்கிறார் பிக்பாஸ் ஜூலி? Description: இப்போது என்ன செய்கிறார் பிக்பாஸ் ஜூலி?

இப்போது என்ன செய்கிறார் பிக்பாஸ் ஜூலி?


இப்போது என்ன செய்கிறார் பிக்பாஸ் ஜூலி?

ஒருகாலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யமாக இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸை சாடி, ‘’சின்னம்மா...சின்னம்மா...ஓ.பி.எஸ்ஸை எங்கம்மா” என எழுப்பிய கோசத்தால் பிரபலம் ஆனவரை, விஜய் டிவி வாரிக் கொண்டது.

கமலஹாசனே அறிமுகப்படுத்த பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஜூலி, கடைசியில் ஒரு போலி என பெயர் வாங்கி வெளியில் வந்தார். அதன் பின்னர் விமலுடன் ஒருபடத்தில் கிளைமேக்ஸில் ஒருகாட்சியில் மட்டும் தலைகாட்டினார். மக்கள் எதிர்மறையாய் வசை பாடினாலும் ஜூலி காட்டில் அடைமழை தான். நீட் தேர்வை மையப்படித்தி வளர்ந்து வரும் அனிதா எம்.பி.பி.எஸ், அம்மன் தாயே, உத்தமி என மூன்று படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடத்து வருகிறார்.

இப்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் ஜூலி. இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா? அவரது காதலரான மார்க் ஹெம்ரான் தான். அப்போ நிஜத்திலும், திரையிலுமாக ஜோடிக் கூட்டணி தொடர்கிறது. அப்படிப் போடு!


நண்பர்களுடன் பகிர :