பில் கட்டாத கவர்மெண்ட்... பீஸ் போன வாடிக்கையாளர்கள் Description: பில் கட்டாத கவர்மெண்ட்... பீஸ் போன வாடிக்கையாளர்கள்

பில் கட்டாத கவர்மெண்ட்... பீஸ் போன வாடிக்கையாளர்கள்


பில் கட்டாத கவர்மெண்ட்... பீஸ் போன வாடிக்கையாளர்கள்

தலைப்பை படித்து விட்டு இது என்ன வினோதமாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா? உண்மையில் இப்படித்தான் நடந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிக அளவிலான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் குமரி மாவட்டத்தில் தான் இருக்கிறார்கள். இங்கு கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்களிலும், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல் திடீர் என கிடைக்கவில்லை. சுற்றுலா வந்த பலரும் இதனால் தவியாய் தவிக்க சிக்னல் கிடைக்காததன் காரணம் தான் ஆச்சர்யம்.

குமரியில் பி.எஸ்.என்.எல் டவர்களுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை மின்கட்டணம் செலுத்தி வந்தனர். இதுபோக மின் தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் டவர்கள் இயங்குகிறது. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை எரிபொருள் செல்வாகும். இந்நிலையில் இந்த மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்தாதால் டவர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே குமரியில் 50க்கும் மேற்பட்ட டவர்களில் இருந்து நெட்வொர்க் கிடைக்கவில்லையாம்..

க்யாரே...செட்டிங்கா? பில்லை கட்டுங்க சர்க்காரே!


நண்பர்களுடன் பகிர :