நூறு போலீஸூம்... இரண்டு கேமராவும் ஒன்னு... யதார்த்தமாய் பேசிய அட்வைஸ் போலீஸ்க்கு குவியும் பாராட்டு..! Description: நூறு போலீஸூம்... இரண்டு கேமராவும் ஒன்னு... யதார்த்தமாய் பேசிய அட்வைஸ் போலீஸ்க்கு குவியும் பாராட்டு..!

நூறு போலீஸூம்... இரண்டு கேமராவும் ஒன்னு... யதார்த்தமாய் பேசிய அட்வைஸ் போலீஸ்க்கு குவியும் பாராட்டு..!


நூறு போலீஸூம்... இரண்டு கேமராவும் ஒன்னு... யதார்த்தமாய் பேசிய அட்வைஸ் போலீஸ்க்கு குவியும் பாராட்டு..!
காவல் துறைன்னாலே நம்மில் பலபேரும் தெறிச்சு ஓடுறோம். ஏன் தெரியுமா? சாதாரணமா ஒரு புகார் கொடுக்க போனாலே பேப்பர் வாங்கிட்டு வா...பேனா வாங்கிட்டு வான்னு நச்சரிப்புகள் தான். பாஸ்போர்ட் விசாரணைக்காக வரும்போது கூட கைநீட்டாமல் சென்றால் பெரிய விசயம் தான்.

ஆனால் இங்கே ஒரு காவல் துறை அதிகாரி செய்த விசயம் பொதுமக்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது. சமூகவலைதளங்களிலும் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அவரது ஏரியாவுக்குள் ஒரு தெரு மக்களை கூப்பிட்டு அந்த போலீஸ்காரர் அப்படி என்ன பேசினார். இனி அதை படிங்க...

உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதை நீங்களே அடிச்சு உடைஞ்சுட்டா கூட வருத்தம் தெரியாது. ஆனா திருடங்க தூக்கிட்டு போயிட்டா எவ்வளவு வருத்தம் இருக்கும். . ஏரியாவில் எண்ட்ரஸ்ல ஒரு கேமரா, வெளியே போகுற இடத்தில் ஒரு கேமரான்னு இரண்ட்ர் கேமரா போடுங்க போதும். நீங்க இதுக்கு மொத்தமா செலவு பண்றது 10 ஆயிரம் தான்.

இன்னிக்கு இது ஒரு விசயம் இல்ல ஏரியால இருக்குற முக்கியமானவங்க டொனேட் பண்ணலாம். லோக்கல் வார்டு மெம்பர் கூட கொடுக்கலாம். ஆனா நீங்க கேட்டத்தான் கிடைக்கும். நான் எல்லாத் தெருவுக்கும் போய் கேட்க முடியுமா? நீங்க தான் கேட்கணும்.

இது உங்க ஏரியா...இங்க இருக்குறதுலாம் உங்க பொருள் தான். க்ரைம் நடந்தா உங்களுக்குத் தான் நஷ்டம்,. எங்களுக்கு வழக்கம் போல சம்பளம் போட்டுருவாங்க. நாங்க விசாரிப்போம். ஆனா கேமரா இருந்தா க்ரைம் குறையும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியூர் யாராச்சும் போனா ஸ்டேசனுக்கு இன்பார்ம் பண்ணுங்க என மற்றொரு போலீஸ்காரர் சொன்னார். உடனே அட்வைஸ் போலீஸ்காரர், ‘’ கேமரா போட்டா உங்க ஏரியாவுக்கு வாட்ச் மேன் போட்டது மாதிரி. 100 போலீஸ்ம் இரண்டு கேமராவும் ஒன்னு தான்.”என்று அவர் முடிக்க யதார்த்தமாய் பேசிய அவரது பேச்சை அப்பகுதிவாசி ஒருவர் வீடீயோ எடுக்க அது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :